தாய்லாந்து பவுத்த மடத்தில் பெண் சர்ச்சை: ரூ.100 கோடி மோசடியாமில்லே!
புத்தமதம் வலுவாக இருக்கும் நாடுகளில் தாய்லாந்தும் ஒன்று, இந்திரனின் அடையாளங்கள் அதிகம் கொண்ட நாடு அது, ஐராவதி அமரவாதி என இந்திர சாயல் அதிகம்.இதனால் என்னவோ அங்கு வாழ்க்கை சில விஷயங்களில் சொர்க்கம் தினதந்தி பாணியில் சொல்வதென்றால் உல்லாசம், எங்கேயும் எப்போதும் எல்லாமும் சந்தோஷம் என்றால் அது அங்குதான்.அப்படியான தாய்லாந்தில் இப்போது பெரிய புயல் அடிக்கின்றது, பவுத்த சங்கம் ஒன்று பெண் சர்ச்சையில் சிக்கியிருக்கின்றது, சுமார் 100 கோடி வரை அந்த பவுத்தமடத்திலிருந்து அப்பெண் பறித்து கொண்டதாக சர்ச்சைகள் வெடிக்கின்றன.இந்திரன் கெட்டதும் பெண்ணாலே, சந்திரம் கெட்டதும் பெண்ணாலே என்பது போல் இந்த பவுத்த சபை பெரிதாக மாட்டியிருக்கின்றது, வழக்கு விசாரணை என விவகாரம் தீவிரம்.

அப்பெண்ணிடம் விசாரித்தால் வடிவேலு படத்தில் வருவது போல “தோட்டகாரனோடு முடிச்சிரலாம்னு சமையல்காரன்கிட்ட சிக்கி…” என நீள்கின்றது.என்னதான் சொர்க்கபுரி என்றாலும் பவுத்த குருகளுக்கு மரியாதை உண்டு,அது வில்லங்கமானதில் தாய்லாந்து சோகத்திலும் கொந்தளிப்பிலும் உள்ளது. இதற்காக இந்த பவுத்த குருமார்களை தூக்கிலெல்லாம் இட அவர்கள் சட்டம் இடம்தராது மாறாக சில தண்டனைகளை அறிவிப்பார்கள். என்னதான் பவுத்தம் என்றாலும் இதற்கான முடிவுகளெல்லாம் இந்துமதத்தில்தான் உண்டு , சாணக்கியன் போதனை, விவேக சூடாமணி, பட்டினத்தார் பத்ருஹரியார் பாடல்களெல்லாம் படித்தால் இதிலிருந்து துறவியர் விடுபடலாம்
அதனால் சிறையில் அவர்களுக்கு இந்த இந்து நூல்களை போதித்தால் நல்லது
“”வரிக்கோல வேல்விழியார் அநுராக மயக்கில் சென்று
சரிக்கோது வேன் எழுத்து அஞ்சுஞ் சொலேன் தமியேனுடலம்
நரிக்கோ கழுகு பருந்தினுக்கோ வெய்ய நாய் தனக்கோ
எரிக்கோ இரையெதுக்கோ இறைவா கச்சி ஏகம்பனே
காதென்று மூக்கென்று கண்ணென்று காட்டி என் கண்ணெதிரே
மாதென்று சொல்லி வருமாயை தன்னை மறலிவிட்ட
தூதென் றெண்ணாமல் சுகமென்று நாடும் இத் துற்புத்தியை
ஏதென் றெடுத்துரைப்பேன் இறைவா கச்சி ஏகம்பனே
ஊருஞ்ச தமல்ல உற்றார் சதமல்ல உற்று பெற்ற
பேருஞ்ச தமல்ல பெண்டீர் சதமல்ல பிள்ளைகளுஞ்
சீருஞ் சதமல்ல செலவஞ் சதமல்ல தேசத்திலே
யாருஞ் சதமல்ல நின் தாள் சதம் கச்சி ஏகம்பனே
சீறும் வினையது பெண்உரு வாகித் திரண்டுருண்டு
கூறும் முலையும் இறைச்சியும் ஆகிக் கொடுமையினால்
பூறும் மலமும் உதிரமுஞ் சாயும் பெருங்குழி விட்டு
ஏறுங் கரைகண்டிலேன் இறைவா கச்சி ஏகம்பனே
பொருளுடை யோரைச் செயலினும் வீரரைப் போர்க்களத்தும்
தெருளுடை யோரை முகத்தினுந் தேர்ந்து தெளிவதுபோல்
அருளுடை யோரைத் தவத்தில் குணத்தில் அருளில் அன்பில்
இருளறு சொல்லிலுங் காணத்தகும் கச்சி ஏகம்பனே “”
அடிசினல் ரிப்போர்ட்:
தாய்லாந்தில் புத்த பிக்குகள் (துறவிகள்) சம்பந்தப்பட்ட ஒரு பெரிய பாலியல் மற்றும் பணம் பறிப்பு ஊழல் அம்பலமாகியுள்ளது. இது தாய்லாந்து பவுத்த மத அமைப்பையே உலுக்கியுள்ளது.
விவகாரம் என்ன?
விலாவன் எம்சாவத் (Wilawan Emsawat) என்ற சுமார் 30 வயதுடைய பெண், தாய்லாந்தில் உள்ள மூத்த புத்த துறவிகளை தனது வலையில் விழ வைத்து, அவர்களுடன் பாலியல் உறவு கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த உறவுகளை அவர் புகைப்படங்களாகவும், வீடியோக்களாகவும் பதிவு செய்துள்ளார். பின்னர், அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைக் காட்டி துறவிகளை மிரட்டி, அவர்களிடமிருந்து பெரும் தொகையை பணம் பறித்துள்ளார். இந்தத் தொகையானது சுமார் 385 மில்லியன் தாய் பாட் (இந்திய மதிப்பில் தோராயமாக 100 கோடி ரூபாய்க்கு மேல்) என்று கணக்கிடப்பட்டுள்ளது.

அரசியல் மற்றும் மத உலகின் தாக்கம்:
இந்த விவகாரம் வெளிவந்ததும், தாய்லாந்து மன்னர் மகா வஜிரலோங்கோர்ன், தனது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக 80-க்கும் மேற்பட்ட துறவிகளுக்கு அனுப்பிய அழைப்புகளை ரத்து செய்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறைந்தது 9 மடாதிபதிகள் மற்றும் மூத்த துறவிகள் இந்த விவகாரத்தில் சிக்கி, துறவறத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் பண மோசடி மற்றும் பாலியல் சர்ச்சைகள் தாய்லாந்தில் உள்ள பவுத்த சமயம் மீதான மக்களின் நம்பிக்கையை பெரிதும் பாதித்துள்ளன.
இந்த விவகாரத்தைத் தொடர்ந்து, தாய்லாந்து அரசு ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் துறவிகள் குறித்து புகார் அளிக்க ஒரு சிறப்பு தொலைபேசி எண்ணை அறிவித்துள்ளது. மேலும், துறவற விதிகள் மற்றும் மடங்களின் நிதி மேலாண்மை குறித்து மறுஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
விசாரணை விவரங்கள்:
காவல்துறையினர் விலாவன் எம்சாவத்தின் வீட்டை சோதனையிட்டபோது, 80,000-க்கும் மேற்பட்ட ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைக் கைப்பற்றியுள்ளனர்.
இந்த பணம் பறிப்பு மூலம் பெற்ற தொகையை விலாவன் எம்சாவத் சட்டவிரோத ஆன்லைன் சூதாட்டத்தில் செலவழித்ததாகவும் கூறப்படுகிறது.
ஒரு துறவியிடம் தனக்கு குழந்தை பிறந்ததாகவும் கூறி, அவரிடமிருந்து 7.2 மில்லியன் பாட் (சுமார் ரூ.2 கோடி) வரை பறித்துள்ளார். இந்த துறவி பின்னர் துறவறத்திலிருந்து வெளியேறியுள்ளார். இந்தச் சம்பவம் தாய்லாந்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, மேலும் இது புத்த மதத் துறவிகளின் ஒழுக்கம் மற்றும் மடங்களின் நிதி வெளிப்படைத்தன்மை குறித்த தீவிர கேள்விகளை எழுப்பியுள்ளது.


