எங்கே செல்கிறோம் நாம்? – கிர்த்திகா தரன்.

எங்கே செல்கிறோம் நாம்? – கிர்த்திகா தரன்.

பெரியார் பிறந்த தினம் முடிந்து மூச்சு விட்டாச்சு. ஆ.ராசா பேசியது, CT Nirmalkumar என சர்ச்சை முடிந்தது. இங்கு ஒரு விஷயம் நாம் கவனிக்க வேண்டும். ஒரு சமூகம் எப்படி இருக்கிறது? மதங்கள் வழி செல்வோம்.. என்னை பொறுத்தவரை சமூகம் என்பது ஜியாகரபிகல் லொகேஷன் அடிப்படையில் அமையும் பொழுதே நல்லது.. அப்படிதான் அரசியல் சமூகம் செயல்படுகிறது..அதில் குறுக்கு வெட்டாக மத அரசியல் எடுக்கும் பொழுது நாம் இப்படி செல்வோம்.

மதங்கள். அதில் உட்பிரிவுகள். மதம் என்னும் பொழுது எந்த மதமும் தன் சொந்த சீர்திருத்தம் நோக்கி செல்ல வேண்டும் .எப்பொழுதுமே எல்லா காலங்களிலும் மத புரட்சியாளர்கள் உண்டு. அவர்கள்தான் ஜீசஸ், நபி, ராமனுஜர், புத்தர் என பலர். காலத்துக்கு ஏற்றவாறு அவர்கள் இருப்பார்கள். எந்த மதமும் கன்சர்வேடிவ்தான். இன்றைக்கும் மதம் மூலம். லிபரலைஸ் செய்யப்பட்ட அமெரிக்காவில் கூட பெண் உடல் வன்முறையான அபார்ஷன் சட்டம் செயல் வருகிறது.

இஸ்லாம் கேட்கவே வேண்டாம். இருப்பினும் ஹிஜாப் வேண்டாம் என ஈராக்கிய பெண்கள் போராட்டம், முஸ்லிம் பெண் கல்வி, துபாய் போன்ற நகரங்களில் சமூக மதிப்போடு வாழும் பெண்கள் என ஒருப்பக்கம் சீர்திருத்தம் நடக்கிறது. கேள்விகள் கேட்டால் மட்டுமே அது நடக்கும். இஸ்லாத்துக்கு இரு சிக்கல்கள். இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் அவர்களை தீவிரவாதிகளாக நிறுவதில் வெற்றிக்கண்டுள்ளன. அதற்கு பாகிஸ்தான் காஷ்மீர் பிரச்சனையும், அடிப்படைவாதிகாளின் மூர்க்கமும் காரணம். விட்டால் இந்தியா தமிழர்களை கூட அப்படி அடையாளப் படுத்திருக்கும். நாம் தப்பித்தோம். எதிர்ப்புகளால் அவர்களிடம் மத சீர்த்திருத்தம் நடைபெற வேண்டிய நேரத்தில் அடிப்படைவாதம் பெருகுகிறது. இஸ்லாம் இதில் முழித்துக்கொள்ளாவிடில் அவர்கள் மதத்தை விட்டு பலர் வெளியேற விரும்பலாம். அதிக நாள் வெளி மிரட்டல்கள் பயன்படாது. பொருளாதாரா ரீதி ஆண், பெண்கள் முன்னேறுவதே நல்லது.

அடுத்து இந்து மதம். உலகத்தில் அதிக சிக்கு பிடித்த மதம். அதாவது உள் சிக்கல்கள். மலமள்ளும் ஜாதி என்பதெல்லாம் உலகில் எந்த மதத்திலும் பிரிவு வைத்திருக்க மாட்டார்கள். மிக மோசமான பிரிவுகளையும், அடுக்குகளையும் கொண்ட ஒரு மதம். அதற்குள் சீர்திருத்தம் நேரு போன்றவர்களால் முன்னெடுக்க முடிந்தது. கடும் சட்டங்கள் மூலமே அனைவரும் சமம் என்ற நிலைப்பாட்டை கொண்டு வர முடிந்தது. இதற்கு அம்பேத்கரின் ஆழமான சமூக அறிவு பயன்பட்டது.

இந்த சமயத்தில் நாம் சீர்திருத்தம் நோக்கி, அதாவது இந்திரா காந்தியை பார்க்க மாட்டேன் என்ற சங்கராச்சாரியாரின் இடத்துக்கு நாம் சென்று இருக்க வேண்டும் எல்லா சங்கர வைணவ மடங்களிலும் பெண்கள் முக்கியமாய் தலித் பெண்கள் மடாதிபதியாக்கி மதத்தில் மனிதம் என்ற கான்செப்டை நிறுவி புது ரத்தம் பாய்ச்சிருக்க வேண்டும். விதவைகள் மொட்டை அடித்த, நார் மடி புடவை கட்டினால்தான் சங்கராச்சிரியார்கள், அக்னி ஹோத்திரிகளை பார்க்கலாம். இல்லை எனில் பார்க்கக்கூடாது. இந்திரா காந்தி அந்த வேஷம் போடாததால் சங்கராச்சாரியார் பார்க்க மறுத்துள்ளார் பின் தூரமாய் பார்த்துள்ளார் எனில் எந்தளவுக்கு ஒரு அடிப்படைவாதமும், பெண்ணடிமைத்தனமும் ஒரு மதத்தில் ஊடுருவி உள்ளது என்பதை புரியலாம்

அப்படி பெண் மலினப்படுத்தும் மோசமான சம்பிரதாயங்கள் வைத்துள்ள நாம் அடுத்த மதம் பற்றி பேசுகிறோம். நம் மனு ஸ்மிரிதியில் குறிப்பிட்டு இருக்கு என்றால் அதை சரி செய்துவிட்டு பேசனும் அதற்கு எதிரான அரசியல் என்பது, எனக்குள் நோய் புழுத்து போய் இருக்கும். புழுத்து போயிருக்கு என சொல்பவன் எதிரி என மட்டமான அரசியல் மதம் வைத்து நடக்கிறது. அதுவும் ஒரு பெண் பேசும் கோமாளி கூத்தை எல்லாம் பார்க்கும் பொழுது, அரசியல் எத்தனை மலினமாக போய்விட்டது, அதும் பெண்கள் முட்டாள் அரசியலுக்கு பலியாகி விட்டார்களே என வேதனையும். பெண்கள் அரசியலுக்கு வந்தால் கூடுதல் அன்பு வரும், சமத்துவம் வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. அவர்கள் வெறுப்பரசியல் நோக்கி ஈர்க்கப்பட காரணம் அடிமைதனத்தில் இருந்து வெளியே வர vent ஆக நினைக்கிறார்கள் போலும். இருக்கட்டும். இருப்பினும் வரட்டும். அவர்களை மாற்றி விடலாம். அன்பால்.

சோ. கருத்துக்கு வருவோம். காலத்திற்கு ஏற்ப, கல்வி, மதம் என சீர்திருத்தம் செய்வது போய், பகை அரசியலால் அடிப்படைவாதம் பெருகி மிக மோசமான நிலைக்கு போய்க்கொண்டு இருக்கிறோம்.

கேள்விக்கேட்ட பெரியாரை ( அவர் நாத்திகவாதி. அவரின் வெறுப்பு பிரச்சாரத்தில் உடன்பாடு இல்லை. இருப்பினும் அவர் காலத்தில் அது சீர்திருத்ததம் செய்ய தேவையாக இருந்தது. அதனால் அது அக்காலச்சரி. இப்பவும் பிராமண வெறுப்பு ஆரம்பித்தால் சிக்கல்தான். எனவே திராவிடம் என்பதை பழைய பஞ்சாங்கமாக இல்லாமல் அண்ணா போல் காலத்துக்கு ஏற்ற சீர்திருத்தம் கொண்டு வருவதே நல்லது) இன்னும் அதாவது மதங்கள் மூலம் கூறுப்பட்டது , மதங்களுக்குள் கூறு என அரசியல் பார்ட் பார்ட்டாக நடக்கிறது. இதில் இருந்து திராவிட அரசியலும் வெளி வர வேண்டும். தெற்கில் நடக்கும் ஜாதி அரசியலில் இருந்து இளைஞர்களை மீட்டு பொருளாதார, ஜியாகரபிகல் அரசியலை நிறுவ வேண்டும்.

ஊழலின்மை, நிர்வாக சீர்திருத்தம் என செய்ய வேண்டியது ஆயிரமாயிருக்க, நாட்டை செப்பனிடுவதில் அத்தனை வேலை இருக்க, நம்மை மத, இன அடிப்படைவாதத்திற்கு கொண்டு செல்லும் அரசியலை விலக்கி நாம் தீவிரமாக கவனம் செலுத்தி அவர்களை களை எடுக்க வேண்டும். இங்கு கர்னாடாகாவில் 50% கமிஷன் அரசாகிவிட்டது என காண்டிராக்டர்கள் அலறுகிறார்கள். மத்தியில், மாநிலத்தில் சீர்திருத்தம் என்பது சர்வாதிகார போக்கில் உள்ளது. அதாவது ஒரு சாராருக்கு உதவும் விஷயம். உண்மையில் நாம் கேள்வி கேட்க வேண்டிய பல சமூக, பொருளாதார சிக்கல்கள் உள்ளன. காங்கிரஸ் காலத்தில் அதற்குதான் போராடிக்கொண்டு இருந்தோம்.

ஆனால் இன்று நம்மிடைய அடித்துக்கொள்கிறோம். நாம் மூர்க்கமான ஒரு தலைமுறையை உருவாக்குகிறோம். சிந்திக்கவே இயலாமல், தனக்கு என்ன தேவை என முடிவெடுக்காத மத அடிப்ப்படைவாதம் பின்பற்றும் தலைமுறை கண்டு அடி வயிறு கலங்குகிறது. என்ன செய்வது ? மக்கள் இதுப்போன்ற மாக்களை முழுக்க ஒதுக்க வேண்டும். மதங்கள் தாண்டி மனிதம் நோக்கி செல்ல வேண்டும்.

அவ்வளவுதான்..
நல்லதுதான் நடக்கும்.
நம்புகிறேன்.

கிர்த்திகா தரன்.

error: Content is protected !!