பெண் குழந்தைதான் வேண்டும்! – இந்திய மக்களிடையே நடந்த ஆய்வு ரிசல்ட்!
கடந்த புத்தாண்டு தினத்தில் உலகிலேயே அதிக எண்ணிக்கையில், இந்தியாவில் 69,070 புதிய குழந்தைகள் பிறந்துள்ளதாக ஐநாவின் குழந்தைகள் நல அமைப்பான யூனிசெப் தெரிவித்து உள்ளது. அதே சமயம் . பெண் குழந்தை பிறந்தாலே, நமக்கு ஒரு சுமை வந்துவிட்டது என நினைக்கும் மக்களிடத்தில், தற்போது தங்களுக்கு பெண் குழந்தைதான் வேண்டும் என்று கேட்கும் போக்கு நிலவுவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
ஆம்.. நம் இந்தியாவில் 15 வயது முதல் 49 வயது வரையுள்ள 79 சதவிகித பெண்களும்,15 வயது முதல் 54 வயது வரையுள்ள 78 சதவிகித ஆண்களும் குறைந்தபட்சம் ஒரு பெண் குழந்தையாவது பிறக்க வேண்டும் என நினைக்கின்றனர் என தேசிய குடும்ப சுகாதார ஆய்வு தெரிவித்துள்ளது.
அதிலும் குறிப்பாக , எஸ்.சி.,எஸ்.டி.,முஸ்லீம், கிராம மக்கள் மற்றும் பொருளாதார ரீதியில் கீழ்மட்டத்தில் இருக்கும் ஆண்களும்,பெண்களும்தான் தங்களுக்கு ஒரு பெண் குழந்தையே வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்கள். இத்தனைக்கும் 2005-06 ஆம் ஆண்டிலில் தேசிய குடும்ப சுகாதார ஆய்வியிலிருந்து பெண் குழந்தைகளை விரும்பும் ஆண்களின் சதவிகிதம் 65 ஆகவும்,பெண்களின் சதவிகிதம் 74 ஆகவும் உயர்ந்துள்ளது. இந்த போக்கு இருக்கின்றபோதிலும், மகன் வேண்டும் என கேட்கும் பெற்றோர்களும் இருக்கின்றனர்.
அதாவது 81 சதவிகித கிராமப்புற பெண்களும்,75 சதவிகித நகர்புற பெண்களும் பெண் குழந்தையை விரும்புகின்றனர். 80 சதவிகித கிராமப்புற ஆண்களும்,75 சதவிகித நகர்ப்புற ஆண்களும் பெண் குழந்தை வேண்டும் என்கின்றனர்.79 சதவிகித எஸ்.சி. மக்களும்,84 சதவிகித எஸ்.டி.,மக்களும் பெண் குழந்தையை விரும்புகின்றனர்.
ஆனாலும் பொருளாதாரத்தில் முன்னோக்கி இருப்பவர்களை இந்த வரிசையில் பார்க்கும்போது, 73 சதவிகித வசதிமிக்க பெண்களும், 72 சதவிகித வசதிமிக்க ஆண்களும் ஒரு பெண் குழந்தை வேண்டும் என்கின்றனர்.ஆனால், 86 சதவிகித ஏழை பெண்களும்,85 சதவிகித ஏழை ஆண்களும் பெண் குழந்தை வேண்டும் என்கின்றனர் என்பது தனிச் செய்தி.
மேலும் அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த 82 சதவிகித பெண்களும்,83 சதவிகித ஆண்களும் ஒரு ஆண் குழந்தை வேண்டும் என நினைக்கின்றனர். 19 சதவிகித பெண்களும்,ஆண்களும் அதிக பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகள்தான் வேண்டும் என்கின்றனர். 3.5 சதவிகிதம் பேர் மட்டுமே அதிக ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகள் வேண்டும் என்கின்றனர். பிகாரில் 37 சதவிகித பெண்களும் ,உத்தரபிரதேசத்தில் 31 சதவிகித பெண்களும் ஆண் குழந்தைதான் வேண்டும் என்கின்றனர். இந்த பெண்களின் சதவிகிதமே அதிகம் என்பதுதான் இந்த ஆய்வின் தகவல் என்பது குறிப்பிடத்தக்கது