பாகமதி – விமர்சனம் = அனுஷ்காவின் ரசிகர்களுக்கு மட்டுமே ஆனது!

பாகமதி – விமர்சனம் = அனுஷ்காவின் ரசிகர்களுக்கு மட்டுமே ஆனது!

 

அழகு அனுஷ்கா நடிப்பில் ஒரு பேய்க்கதை எனில் நீங்கள் என்ன எதிர்ப்பார்ப்பீர்களோ அவை அனைத்தும் அப்படியே இருக்கும் படம் தான் இந்த பாகமதி. கொலைக் குற்றத்திற்காக ஜெயிலில் இருக்கும் ஐ ஏ எஸ் அனுஷ்காவை ஒரு மந்திரியின் வழக்கில் விசாரிக்க காட்டுக்குள் இருக்கும் பாகமதி பங்களாவிற்கு அழைத்து செல்கிறது. அந்த விசாரணையும், பாகமதி பேயும், அனுஷ்கா செய்த கொலையின் காரணமும் ஒரு புள்ளியில் இணைவது தான் கதை.

அனுஷ்கா அழகாக இருக்கிறார் ஆனாலும் அவர் இன்னும் புஷ்டியாகத்தான் இருக்கிறார். பாகமதியாக மிரட்டும் இடங்களிலும், அப்பாவியாய் மன நலம் பாதிக்கப்பட்டு அரற்றும் இடத்திலும் கிளைமாக்ஸிலும் மிரட்டுகிறார். அவருக்கென ரெடிமேட் செய்யப்பட்ட கதை. மற்ற அனைவரும் அவருக்கு சாதகமான பாத்திரத்திலேயே வருகிறார்கள்.

ஜெயராம் தன் பாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார். வேறு யாருக்கும் கதையில் முக்கியத்துவம இல்லை.

முதல் பாதியில் இசையும் காட்சிகளும் சேர்ந்து உணமையிலேயே பயமுறுத்துகிறது. பாகமதி பங்களா அற்புதமாக செட் போடப்பட்டிருக்கிறது. கிளைமாக்ஸில் வரும் டிவிஸ்ட் சாதாரண ரசிகன் எதிர்பாராதது.

முதல் பாதி முழுதும் பாகமதி பங்களாக்குள்ளேயே நடக்கிறது. பயமுறுத்தும் காட்சிகள் எதிலும் எந்த புதுமையும் இல்லை. அனுஷ்காவை ரசிப்பவர்களுக்கு மட்டுமேயான இடைவேளை.

நாம் இளைப்பாறும் காமெடிக்காட்சிகள் எதுவும் சுத்தமாக இல்லை. இறுதிக் காட்சிக்கு கொஞ்சம் முன்னே தான் கதையின் விறுவிறுப்புகுள் நுழைகிறார்கள்.

ஆனால் அதுவரை நம்மைக்காப்பாற்றத்தான் யாருமில்லை.

எல்லாப் பேய்ப்படங்கள் போலும் எந்த புதுமையும் இல்லாமல் சுருங்கிப்போவதுதான் இந்தப்படத்தின் மிகப்பெரும் மைனஸ்.

அனுஷ்காவின் ரசிகர்களுக்கு மட்டுமே ஆனது இந்த பாகமதி.

மார்க் 4 / 2.75

error: Content is protected !!