நான் சாகலை – பரபரப்பைக் கிளப்பும் ரஷ்யா வாக்னர் தலைவரின் வீடியோ!

நான் சாகலை – பரபரப்பைக் கிளப்பும் ரஷ்யா வாக்னர் தலைவரின் வீடியோ!

ஷ்யாவிற்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு வந்தவர் ரஷ்ய தனியார் ராணுவ அமைப்பான வாக்னர் குழுவின் தலைவர் யெவ்ஜெனி ப்ரிகோஜின். இவர் பயணித்த ஜெட் விமானமானது நேற்று விபத்தில் சிக்கி.அந்த விபத்தில் அவர் உயிரிழந்துவிட்டதாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்த நிலையில் தான் உயிருருடன் இருப்பதாக ப்ரிகோஷின் வெளியிட்டுள்ள வீடியோ ரஷ்யாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

62 வயதான யெவ்ஜெனி ப்ரிகோஜின் பயணித்த ப்ரிகோஜின் Embraer-135 (EBM-135BJ) என்ற விமானம் நேற்று (புதன்கிழமை) ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிற்கு சென்று கொண்டிருந்த பொழுது, மாஸ்கோவின் வடமேற்கே உள்ள ட்வெர் பகுதியில் விபத்துக்கு உள்ளானதாக ரஷ்யாவின் ரோசாவியட்சியா என்ற விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. விபத்தில் சிக்கிய இவர்களது உடல்கள் சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக ரஷ்யாவின் அரசு செய்தி நிறுவனமான இன்டர்ஃபாக்ஸ் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை.

இந்நிலையில், விமான விபத்தில் இறந்ததாக கருதப்பட்ட பிரிகோஷின், தான் உயிருடனும், பாதுகாப்பாகவும் இருப்பதாக காரில் சென்றபடி பேசுவது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில், “நான் தற்போது ஆப்பிரிக்காவில் இருக்கிறேன், நான் நலமாக இருக்கிறேன். இன்னும் உயிருடன் தான் இருக்கிறேன்” என்று கூறுவது போல பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது ரஷ்யாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

error: Content is protected !!