கருமேகங்கள் கலைகின்றன – விமர்சனம்!

கருமேகங்கள் கலைகின்றன – விமர்சனம்!

சொல்ல மறந்த கதை, தென்றல், சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு, அம்மாவின் கைப்பேசி, களவாடிய பொழுதுகள் ஆகிய படங்களை இயக்கி அசத்திய தங்கர் பச்சான் டைரக்‌ஷனில் கொஞ்சம் நீண்ட இடைவெளிக்கு பிறகு உருவாகி வந்துள்ள படமே., ‘கருமேகங்கள் கலைகின்றன’. இதில் வெவ்வேறு வயது, சமூக பின்னணி கொண்ட இரண்டு பேரின் வாழ்க்கை பயணத்தை காட்டிக் கவர முயன்றிருக்கிறார்.’

அதாவது ரிட்டயர்ட் ஜட்ஜ் ராமநாதன் (பாரதிராஜா) தன் சொந்த மகன் கிரிமினல் லாயர் கோமகனுடன் (கவுதம் மேனன்) ஒரே வீட்டில் இருந்தாலும் 10 வருடமாக பேசாமல் வாழ்ந்து வருகிறார். அதற்கு ஒரு காரணம் உள்ளது. இந்நிலையில் 13 வருடத்துக்கு முன்னால் தன் பெயருக்கு வந்த கடிதம் ராமநாதனிடம் கிடைக்கிறது. அதைக் கண்டும் அதிர்ச்சி அடைந்த ராமநாதன் திடீரென்று வீட்டிலிருந்து வெளியேறி கடிதம் எழுதிய பெண்ணை தேடி செல்கிறார். இதற்கிடையில் ஆதரவற்றோர் இல்லத்தில் இருக்கும் மகளை காண வரும் வீரமணி (யோகிபாபு) தன் மகளை ( சாரல்) தேடிப் போய் கொண்டிருக்கிறார் .. இருவரும் சந்தித்து கொள்ள வாய்ப்பு கிடைத்த சூழலில் பகிரும் விஷயங்களும், அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்களுமே இப்படத்தின் கதை.

84 வயதான இயக்குநர் பாரதிராஜ ரிட்டயர்ட் ஜட்ஜ் ரோலுக்கு அர்த்தம் கொடுத்துள்ளார் தன் தவறுக்கு மன்னிப்பு கிடைக்குமா? தன் வீட்டில் தன்னை புரிந்து கொள்வார்களா என்ற அன்புக்கு ஏங்கும் முதியவர் நடிப்பில் சிலபலர் வீட்டு அப்பாவை, தாத்தாவை நினைவு படுத்தி விடுகிறார் . யோகிபாபு தான் ஒரு சிறந்த குணாச்சித்திர நடிகர் என்பதை வரும் காட்சிகள் மூலம் உணர்த்துகிறார். அதிதி பாலன், கெளதம் மேனன், மருமகளாக நடிப்பவர் என அனைவருமே நடிப்பால் அசத்தி விடுகிறார்கள்.

ஜி. வி. பிரகாஷின் இசை மோசமில்லை என்றாலும் மனசில் ஒட்ட தவறி விடுகிறது. ஏகாம்பரம் -தங்கரின் ஒளிப்பதிவில் லெனினின் படத்தொகுப்பு ஆகியவை ஓ கே சொல்ல வைக்கிறது,.டெக்னாலஜி இம்ப்ரூவ்மெண்ட்டால் குடும்ப உறவுகளுக்குள் ஏற்படும் உறவு சிக்கல்களை சொல்ல முன் வந்துள்ளார் தங்கர்.. ஆனால் ராமநாதன், வீரமணி மூலம் பல கதைகளை சொல்ல தங்கர் பச்சான் முயற்சி செய்தது தான் பலகீனமாகிவிட்டது.

படம் துவங்கி முதல் அரை மணிநேரம் பாரதிராஜா மற்றும் அவரின் குடும்பத்தாரை தான் காட்டுகிறார்கள். வெளிநாட்டில் வாழும் மூத்த மகனும், மகளும் ராமநாதனின் 75வது பிறந்தநாளை யூ டியூப் லைவ் வழியாக கொண்டாடுவதை காட்டியிருக்கிறார்கள். அதன் பிறகு அதிதி பாலனை காட்டுகிறார்கள். அவரின் பின்னணி, ஒரு என்கவுன்ட்டர் வழக்கால் அவர் வாழ்க்கை எப்படி கடினமாகிறது என காட்டியிருக்கிறார்கள். இது எல்லாம் இரண்டாம் பாதியில் ஒத்துப் போனாலும் திரைக்கதை மொத்தமாக சொதப்பலாகி விட்டது. இயக்குநர் காட்ட விரும்பும் உலகை முழுவதுமாக ஏற்க கடினமாகிவிடுவதால் பார்த்த காட்சிகள் கலைந்து விடுகின்றன

மொத்தத்தில் கருமேகங்கள் கலைகின்றன – சின்னத் திரையில் வரும் போது நேரமிருந்தால் பார்க்கலாம்

மார்க் 2.5/5

error: Content is protected !!