June 2, 2023

வேல்ஸ் சர்வதேசப் பள்ளியில் ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம்!

சர்வதேச பாலர் மற்றும் தொடக்க பள்ளிகளில் உள்ள, சி.பி.எஸ்.இ., – ஐ.சி.எஸ்.இ., – ஐ.பி., போன்ற, பல்வேறு பாடத்திட்டத்தை பயன்படுத்துவோரும் பின்பற்றும் வகையில் ஒரு முழுமையான பாடத் திட்டமான கிண்டில் கிட்ஸ் (Kindle Kids International curriculum)பாடத் திட்டத்தை வேல்ஸ் பல்கலைக் கழக வேந்தரும் வேல்ஸ் கல்விக் குழும நிறுவனருமான டாக்டர் ஐசரி .கே.கணேஷ் கடந்த பிப்ரவரி மாதம் 9 ஆம்தேதி அன்று ஈஞ்சம்பாக்கம் வேல்ஸ் சர்வதேசப்பள்ளியில் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் Hindu In-School நாளிதழ் ஆசிரியர் கிருத்திகா ரெட்டி தலைமை விருந்தினராகவும் டாக்டர் .ஆண்டோனியோஸ்ரகுபான்ஸே, (தலைவர் பிரிட்டிஷ் கவுன்சில் கல்விப் பணி) சிறப்பு விருந்தினராய் கலந்து கொண்டனர்.

இந்த சர்வதேசப் பாடத்திட்டத்தை உருவாக்குவதற்கு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சீரியபணியாற்றிய சிரிய பெருமக்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
முன்னரே குறிப்பிட்டது போல் உலகளாவிய பாலர் மற்றும்தொடக்கப் பள்ளிகளில் உள்ள சி.பி.எஸ்.இ(CBSE), ஐ.சி.எஸ்.ஈ (ICSE)ஐ.பி (IB) போன்ற பல்வேறு பாடதிட்டத்தை பயன் படுத்துவோரும் பின்பற்றும் வகையில் ஒரு முழுமையான பாடத்திட்டமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள முதல்தரம் வாய்ந்த பாலர் பள்ளியான வேல்ஸ்சர்வதேசப்பள்ளியில், கிண்டில் கிட்ஸ் பாடத் திட்டம் வெற்றிகரமாய் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. இதன் வெற்றி ஆசியாவில் உள்ள பள்ளிகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதனாலேயே தமிழ்நாட்டின் பல் வேறு பகுதிகளிலிருந்தும் தலைசிறந்த கல்வியாளர்களும் கல்வி நிறுவனங்களின் தலைவர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர் .

வேல்ஸ் கல்விநிறுவனம் 25 ஆண்டுகளுக்குமேலாக 25000த்துக்கும் மேற்பட்டமாணவர்களுடன் 25 கல்வி நிறுவனங்கள் மற்றும் 5000க்கும் மேற்ப்பட்ட ஆசிரிய பெருமக்களுடன் கல்வித்துறையில் தனது சீரியபணியை தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் சிங்கப்பூரில் பாலர் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை ‘ஒரே குடையின் கீழ் ‘ என்ற நிலையில் சிறப்பாக செயல்பட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.