இந்திய இரயில்வே உணவு வழங்கலில் தெற்கு மண்டலத்தில் வேலைவாய்ப்பு!

இந்திய இரயில்வே உணவு வழங்கலில் தெற்கு மண்டலத்தில் வேலைவாய்ப்பு!

ந்திய இரயில்வேயின் ஒரு அங்கமான IRCTC, இரயில்களில் உணவு வழங்கல் (Catering), ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு மற்றும் சுற்றுலா மேம்பாடு ஆகியவற்றில் உலகத்தரம் வாய்ந்த சேவைகளை வழங்கி வருகிறது. வந்தே பாரத் போன்ற நவீன இரயில்களின் வருகைக்குப் பிறகு, பயணிகளுக்கு உயர்தரமான உணவையும் சேவையையும் உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு IRCTC-க்கு அதிகரித்துள்ளது. இந்தப் பணிகளைத் திறம்பட மேற்கொள்ளவே தற்போது ‘ஹாஸ்பிடாலிட்டி மானிட்டர்கள்’ பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.  அந்த வகையில் IRCTC தெற்கு மண்டலத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு இதோ: 

வேலைவாய்ப்பு விவரங்கள்

1. பணியின் பெயர் மற்றும் கால அளவு 

  • பணியின் பெயர்: ஹாஸ்பிடாலிட்டி மானிட்டர் (Hospitality Monitor).

  • பணித்தன்மை: இது ஒரு தற்காலிக ஒப்பந்தப் பணியாகும்

  • கால அளவு: தொடக்கத்தில் 2 ஆண்டுகள். பணியின் தேவை மற்றும் செயல்திறன் அடிப்படையில் மேலும் ஒரு ஆண்டு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது

2. காலிப்பணியிடங்கள் மற்றும் ஊதியம் 

  • மொத்த இடங்கள்: 84 பணியிடங்கள் (மத்திய அரசின் இடஒதுக்கீடு விதிகளின்படி நிரப்பப்படும்)

  • மாதச் சம்பளம்: ரூ.30,000 (சட்டப்படியான பிடித்தங்கள் மற்றும் இதர படிகள் உட்பட)

3. கல்வித்தகுதி மற்றும் அனுபவம்

விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட ஏதேனும் ஒரு தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்:

  • B.Sc. Hospitality and Hotel Administration.  

  • BBA/MBA (Culinary Arts)

  • B.Sc. Hotel Management and Catering Science

  • MBA (Tourism and Hotel Management)

  • அனுபவம்: அனுபவம் இல்லாதவர்களும் (Freshers) தாராளமாக விண்ணப்பிக்கலாம்

4. வயது வரம்பு (01/04/2026 அன்று)

  • பொதுப் பிரிவினருக்கு (UR) அதிகபட்ச வயது 27 ஆண்டுகள்

  • அரசு விதிகளின்படி SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு உண்டு

பணி செய்யும் இடம் மற்றும் பொறுப்புகள்

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பணியமர்த்தப்படுவார்கள். இருப்பினும், நிர்வாகத் தேவைக்கேற்ப இந்தியா முழுவதும் எங்கு வேண்டுமானாலும் பணிமாற்றம் செய்யப்படலாம்

முக்கியப் பொறுப்புகள்:

  • வந்தே பாரத், பாரத் கௌரவ் போன்ற சிறப்பு இரயில்களில் உணவுத் தரம் மற்றும் சேவையை மேற்பார்வையிடுதல்

  • பேஸ் கிச்சன்கள் மற்றும் ஸ்டேடிக் கேட்டரிங் யூனிட்களைக் கண்காணித்தல்

  • பயணிகளின் புகார்களுக்குத் தீர்வு காண்பது மற்றும் கருத்துகளைச் சேகரித்தல்

  • மாதத்தில் சுமார் 22 நாட்கள் இரயில்களில் பயணம் செய்து பணியைக் கண்காணிக்க வேண்டி இருக்கும்.  

நேர்காணல் விவரங்கள் (Walk-in-Interview)

இந்த வேலைக்குத் தனியாகத் தேர்வுகள் ஏதுமில்லை. தகுதியானவர்கள் நேரடியாக நேர்காணலில் பங்கேற்கலாம்

  • தேதிகள்: ஏப்ரல் 25, 27 மற்றும் 28, 2026

  • நேரம்: காலை 10.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை

  • நேர்காணல் நடைபெறும் இடம்:

    IRCTC மண்டல அலுவலகம், 6A, தி ரெயின் ட்ரீ பிளேஸ், எண். 9, மெக் நிக்கோல்ஸ் சாலை, சேத்துபட்டு, சென்னை – 600031

கொண்டு வர வேண்டியவை: 

  1. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம்

  2. கல்வி மற்றும் அனுபவ சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்கள்

    மூன்று சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்.  

  3. அடையாள அட்டை (ஆதார் போன்றவை).  

இந்த வாய்ப்பு, குறிப்பாகத் தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் தெரிந்த மொழித் திறன் கொண்டவர்களுக்கு ஒரு கூடுதல் சாதகமாக இருக்கும். தகுதியுள்ள இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி மத்திய அரசு நிறுவனமான IRCTC-யில் தங்களது பணியைத் தொடங்கலாம்.

Related Posts