வனம் – விமர்சனம்!

வனம் – விமர்சனம்!

ட்டு தோட்டக்கள், ஜீவி படங்களை தொடர்ந்து, வெற்றி நடிப்பில் வெளியாகியிருக்கும் படம். வித்தியாசமான கதைகளங்களை தேர்ந்தெடுப்பது வெற்றியின் பலம். இந்தப்படத்திலும் அதையே தொடர்ந்திருக்கிறார். ஆனால் களம் மட்டும் வித்தியாசமாக இருந்தால் போதுமா திரைக்கதையும் அதே அளவு ஈர்க்க வேண்டுமல்லவா? அதிலும் தப்புத் தண்டா என்ற படத்தை இயக்கிய ஸ்ரீ கந்தன் ஆனந்த்தின் அடுத்த படம் இது. முந்தைய படத்தை திருட்டை மையமாக வைத்து உருவாக்கியவர், இந்தப் படத்தில் அமானுஷ்யமான ஒரு விஷயத்தைக் கையில் எடுத்திருக்கிறார். படமாக்கப்பட்ட விதமும் திரைக்கதையும் ஏமாற்றமளிக்கின்றன.

புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கல்லூரியில் ஒரு குறிப்பிட்ட அறையில் தற்கொலை மரணங்கள் நிகழ்கிறது . அதனை ஒரு மாணவன் ஆராய ஆரம்பிக்க அதன் பின்னால் மறுபிறவி கதையும் பழிவாங்கும் ஆத்மாவும் இருப்பது தெரிகிறது. அந்த ஆத்மாவின் கொலை வெறியை அந்த மாணவன் எப்படி சமாளிக்கிறான்என்பது தான் கதை

வெற்றி தனக்கான பாத்திரத்தை வழக்கமாக சிறப்பாக செய்பவர் இதில் கொஞ்சம் அசிரத்தையாக ஆக்ட் செய்திருப்பதன் பின்னணி தெரியவில்லை.வெற்றியை தவிர்த்து வேலா ராமமூர்த்தி, அழகம்பெருமாள் கொஞ்சம் கவர்கிறார்கள். திடீரென மாறும் அழகம் பெருமாளின் பாத்திர வடிவம் ஈர்க்கவில்லை. இணையத்தில் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் அனு சித்தாரா படத்தில் சாந்தமாக வந்து போகிறார்.

ஒரு கலைக்கல்லூரியின் அறிமுகம், அங்கு நடக்கும் தற்கொலைகள் அதன் பிண்னணியை ஆராயும் மாணவன் உடன் இன்னொரு மாணவி என தொடக்கம் மிக சுவாரஸ்யமாக ஆரம்பிக்கிறது. ஆனால் அதன் பின்கதையாக வரும் மறு பிறவி கதையும், காடு சார்ந்த மக்களின் வாழ்வும் கொஞ்சம் மட்டுமல்ல நிறையவே செயற்கையாக இருக்கிறது.

நம் நாட்டில் எக்கச்சக்கமாக இருந்த காட்டின் வளம் குறித்தும் அதில் இயற்கையை சார்ந்து வாழும் மக்கள் அவர்களை துரத்தும் அரசாங்கம் என்கிறகதையெல்லாம் தமிழ் சினிமா பல தடவை அடித்து துவைத்து விட்டது. அதையே மீண்டும் பார்ப்பது சோர்வை தருகிறது.

நாம் எங்காவது தூர பயணம் மேற்கொள்ளும் போது, ஒரு பாக்கெட் நாவலை வாங்கி படிப்போம், அதில் வரும்இந்திரா சௌந்தர்ராஜன் கதைகள் போன்ற கதைகளின் திரை அனுபவத்தை அப்படியே தந்திருக்கிறது படம் ஆனால் நாவலாக படிப்பது எல்லாமே படத்திற்கு சரிப்பட்டு வராது என்பதை மறந்து போய் விட்டார்கள்.

மொத்தத்தில் இந்த வனம் ஈர்க்கவில்லை

மார்க் 2.5 / 5