காற்றில் பரவும் புதிய வகை கொரோனா!- உலக நாடுகள் அதிர்ச்சி!

காற்றில் பரவும் புதிய வகை கொரோனா!- உலக நாடுகள் அதிர்ச்சி!

கொரோனா இரண்டாம் அலை தாக்கமே இன்னும் நீடிக்கும் சூழலில்தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா, ஹாங்காங் சென்ற இரண்டு பயணிகளுக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளதும் இஸ்ரேலில் பரவி இருப்பதாக தகவல் வந்திருப்பதும் பல நாடுகளிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்த பயணியிடம் கண்டறிப்பட்ட புதிய வகை கொரோனாவுக்கு B.1.1.529 என பெயரிடப்பட்டுள்ளது. அந்த பயணி தங்கியிருந்த விடுதி அறைக்கு எதிரே உள்ள அறையில் தங்கியிருந்த மற்றொரு நபருக்கும் புதிய வகை கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதை ஹாங்காங் அரசு உறுதி செய்துள்ளது.

இந்த புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் சுவாசித்த காற்றை, மற்றொருவர் சுவாசித்ததால் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என அரசு விளக்கம் அளித்துள்ளது. புதிய வகை உருமாறிய கொரோனா, வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் மாற்றங்களை கொண்டுள்ளது என்றும் முன்பிருந்த வகைகளை காட்டிலும் வித்தியாசமான ஒன்றாக உள்ளது என்றும், தென்னாப்பிரிக்க பல்கலைக் கழகங்களில் உயிர் தகவலியல் பேராசிரியராக பணிபுரிந்து வரும் துலியோ டி ஒலிவேரா தெரிவித்துள்ளார்.

புதிய வகை கொரோனா தீவிரமான கவலையை ஏற்படுத்தியுள்ளது என தென்னாப்பிரிக்க சுகாதாரத்துறை அமைச்சர் ஜோ பாஹ்லா தெரிவித்துள்ளார். இதுகுறித்து தொற்று நோய்களுக்கான தேசிய நிறுவனத்தில் மருத்துவ நுண்ணுயிரியலாளர் & சுவாச நோய் பிரிவு தலைவர் அன்னே வான் கோட்பெர்க் கூறுகையில், “புதிய வகை கொரோனாவால் இதுவரை கிட்டத்தட்ட 100 பேர் பாதிக்கப்பட்டிருப்பதை கிருமியியல் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர் என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே ஷாங்காய் மாகாணத்தில் புதிய வகை வைரஸ் பாதிப்பு 3 பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு சுமார் 500 விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வைரஸ் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ஷாங்காய் அரசு மாகாணங்களுக்கு உத்தரவிட்டிருக்கிறது. பி. 1.1.529 வேரியன்ட் வைரஸை கண்டு உலக நாடுகள் பதற்றம் கொண்டுள்ளது.

Related Posts