உ.பி.; மதராஸாவில் சிறைவைக்கப்பட்டிருந்த 51 சிறுமிகள் மீட்பு!

உ.பி.; மதராஸாவில் சிறைவைக்கப்பட்டிருந்த 51 சிறுமிகள் மீட்பு!

மதரஸா’ என்ற அரபிப் பதம், மற்ற மொழிகளில் சொல்லப்படும் பள்ளி,ஸ்கூல் ஆகியவற்றின் நேர்மொழியாக்கமே. இதர மதங்களின் அல்லது மதங்களல்லாத கல்விக்கூடங்களுக்கு எப்படி பள்ளி/School என்று அழைக்கிறோமா, அதே அர்த்தம்தான். மதரஸா என்பதற்கும் பொருந்தும். மதரஸா (مدرسه) என்றால் “கல்விக்கூடம்” என்று பொருள். மூலம் அரபி என்றாலும் உர்தூ, பார்ஸி, துருக்கி, குர்திஸ், இந்தோநேசியன், மலேசியன் ஆகிய மொழிகளிலும் கல்விக் கூடங்களுக்கு இச்சொல் பிரயோகிக்கப்படுகிறது. அதாவது உலக நாடுகளில் சாதாரணக் குடிமக்களுக்கு அந்தந்த அரசுகளால் கல்வி வசதியை பரஆங்கிலத்தில் இதை மொழியாக்கம் செய்யும் போது பிரிட்டிஷார் “பள்ளிக்கூடம்” என்ற அர்த்தத்திலும் அமெரிக்கர்கள் “பல்கலைக் கழகம்” என்ற அர்த்ததிலும் பிரயோகிக்கின்றனர்.(பல்கலைக் கழகத்திற்கு அரபியில் ‘ஜாமிஆ’ என்றவலாக வழங்க முடியாத சூழலில், மதம் சார்ந்த சேவை நிறுவனங்களும் மிஷனரிகளும் இப்பணியை இலாப நோக்கின்றி அல்லது குறைந்த செலவில் வழங்குகின்றன. இதர மதங்களின் வேதாகமப் பள்ளிகளில் எப்படி அந்தந்த மதவேதங்கள் போதிக்கப் படுகின்றனவோ, அதேபோல்தான் மதரஸாக்களில் குர்ஆன் போதிக்கப் படுகிறது.  இதனிடையே உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவில் உள்ள ஜாமியா காதீஜ்துல் குப்ரா லிலாப்நாட் மதராஸாவில் சிறைவைக்கப்பட்டிருந்த 51 சிறுமிகளை காவல்துறையினர் வெள்ளிக்கிழமை இரவு மீட்டனர். அந்த மதராஸாவின் மானேஜர் முகமது தாய்யாப் ஜியா கைது செய்யப்பட்டார்.

உ.பி.யிலுள்ள லக்னோ நகரில் யாசிங்காஞ்ச் என்ற பகுதியில் அமைந்துள்ள ஜாமியா காதீஜ்துல் குப்ரா லிலாப்நாட் என்ற மதராஸாவில் சிறுமிகள் சிறைவைக்கப்பட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாக அப்பகுதியை சேர்ந்த சிலர் காவல்துறையினரிடம் புகார் தெரிவித்தனர். அதை தொடர்ந்து நேற்றிரவு மதராஸாவில் காவல்துறையினர் சோதனையிட்டனர். அங்கு சிறைவைக்கப்பட்டிருந்த 51 சிறுமிகள் மீட்கப்பட்டனர். மேலும் சிறுமிகளை சிறைவைத்து கொடுமைப்படுத்திய மதராஸாவின் மானேஜர் முகமது தாய்யாப் ஜியாவை காவல்துறையினர் கைது செய்தனர்.

மீட்கப்பட்ட பெண்களிடம் விசாரித்ததில் அங்கு அவர்கள் மானேஜரால் மிகவும் மோசமாக நடத்தப்பட்டதாகவும் பல முறை பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகவும் காவல்துறையினரிடம் தெரிவித்தனர். தற்போது இந்த மதராஸா சட்டப்படி அங்கீகாரம் பெற்றுள்ளதா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

அந்த மதராஸாவில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுமிகள் படித்து வந்துள்ளனர். ஆனால் சோதனை நடத்தியபோது 51 சிறுமிகள் தான் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட சிறுமிகள் அனைவரும் தங்கள் பெற்றோர்களிடம் பத்திரமாக அனுப்பிவைக்கப்படுவார்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related Posts