சான்றிதழில் ஆதார் எண் கூடாது: பல்கலைக்கழக மான்யக்குழு அறிவிப்பு.
மாணவர்களின் பட்டப்படிப்பு சான்றிதழ் மற்றும் புரவிஷனல் சான்றிதழ்களில் ஆதார் எண்ணை அச்சிடுவதற்கு பல்கலைக்கழகங்களுக்கு அனுமதியில்லை என்று பல்கலைக்கழக மானிய குழு தெரிவித்துள்ளது.
மாநில அரசுகள் அரசு பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உயர்கல்விக்கான அனுமதி உள்ளிட்டவற்றின்போது ஆவணங்களை சரிபார்ப்பதற்காக பட்டப்படிப்பு சான்றிதழ் மற்றும் புரவிஷனல் சான்றிதழ்களில் ஆதார் எண்ணை அச்சிடுவது குறித்து பரிசீலித்து வருவதாக செய்திகள் வெளிவந்தது.
இந்நிலையில் பல்கலைக்கழக மானிய குழுவின் செயலாளர் மனிஷ் ஜோஷி பல்கலைக்கழகங்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘‘விதிமுறைகளின்படி, ஆதார் எண்ணை வைத்திருக்கும் எந்தவொரு நிறுவனமும், எந்த தரவுகளையும் பொதுவில் வெளியிடக்கூடாது. பட்டங்கள் மற்றும் புரவிஷனல் சான்றிதழ்களில் ஆதார் எண்ணை அச்சிடுவதற்கு அனுமதிக்கப்படாது. உயர்கல்வி நிறுவனங்கள் உதய்யின் விதிகள் மற்றும் ஒழுங்கு முறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.