இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார்!

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார்!

ங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் 2 நாள் பயணமாக வரும் 21-ம் தேதி இந்தியா வர உள்ளார். இங்கிலாந்து பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் போரிஸ் ஜான்சன் இந்தியா வருவது இதுவே முதல்முறையாகும்.

இதற்கு முன்னதாக, கடந்த ஆண்டு இரு முறை போரிஸ் ஜான்சன் இந்தியா வர திட்டமிட்டிருந்தார். ஆனால், அந்த இருமுறையும் கொரோனா பரவல் காரணமாக அவரது இந்திய பயணம் ரத்து செய்யப்பட்டது. அதேபோல், இந்த ஆண்டு இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கவும் போரிஸ் ஜான்சன் திட்டமிட்டிருந்தார். ஆனால், இங்கிலாந்தில் மீண்டும் கொரோனா அதிகரித்ததால் அந்த பயணமும் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், போரிஸ் ஜான்சன் இருநாள் பயணமாக வரும் 21-ம் தேதி இந்தியா வர உள்ளார். பயணத்தின் முதல் நாளில் பொரிஸ் ஜான்சன் குஜராத் செல்கிறார். பயணத்தின் இரண்டாவது நாளான 22-ம் தேதி பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

இந்த பேச்சுவார்த்தையின் போது இருதரப்பு வர்த்தகம், பாதுகாப்புத்துறையில் ஒத்துழைப்பை அதிகரிப்பது உள்பட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தமும் கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய பயணம் குறித்து போரிஸ் ஜான்சன் அளித்த பேட்டியில்,

எனது இந்திய பயணம் இந்தியா – பிரிட்டன் இடையே இரு நாட்டு மக்களுக்கு மிகவும் முக்கியமான விஷயங்களை வழங்கும். வேலை உருவாக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சி முதல் பாதுகாப்பு வரையிலான அம்சங்களுக்கு உதவியாக இருக்கும் என்றார்.

Related Posts