UCO வங்கியில் பட்டதாரிகளுக்கு அதிகாரி வேலைவாய்ப்பு!

UCO வங்கியில் பட்டதாரிகளுக்கு அதிகாரி வேலைவாய்ப்பு!

யூகோ வங்கி (UCO Bank) தனது 2026-27 ஆம் ஆண்டிற்கான பிரம்மாண்ட ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஸ்பெஷலிஸ்ட் ஆபீஸர் (SO) மற்றும் ஜெனரலிஸ்ட் ஆபீஸர் பிரிவுகளில் மொத்தம் 173 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. வங்கித் துறையில் கால்பதிக்கக் காத்திருப்பவர்களுக்கு இது ஒரு ஜாக்பாட் வாய்ப்பு.

என்னென்ன பதவிகள்?

இந்த ஆட்சேர்ப்பு மூலம் ஜூனியர் மேனேஜ்மென்ட் கிரேடு (JMGS-I) மற்றும் மிடில் மேனேஜ்மென்ட் கிரேடு (MMGS-II) நிலைகளில் கீழ்க்கண்ட பதவிகள் நிரப்பப்படுகின்றன:

  • நிதிப் பிரிவு: டிரேட் ஃபைனான்ஸ் ஆபீஸர், டிரஷரி ஆபீஸர், சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் (CA).

  • தொழில்நுட்பப் பிரிவு: மென்பொருள் உருவாக்குநர் (Software Developer), டேட்டா அனலிஸ்ட் & டேட்டா சயின்டிஸ்ட்.

  • பாதுகாப்புப் பிரிவு: சைபர் செக்யூரிட்டி ஆபீஸர் மற்றும் கிளவுட் இன்ஜினியர்.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? (தகுதிகள்)

  • கல்வித்தகுதி: அந்தந்தத் துறை சார்ந்த பட்டப்படிப்பு (B.E/B.Tech/CA/CFA/MBA/Post Graduation) முடித்திருக்க வேண்டும். குறிப்பாக ஐடி மற்றும் டேட்டா சயின்ஸ் பணிகளுக்குத் தொழில்நுட்பக் கல்வி அவசியம்.

  • வயது வரம்பு: குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 30 முதல் 40 வயது வரை (பதவியைப் பொறுத்து மாறுபடும்). எஸ்சி/எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கு அரசு விதிமுறைப்படி வயது தளர்வு உண்டு.

தேர்வு மற்றும் விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பங்களின் எண்ணிக்கையைப் பொறுத்து, ஆன்லைன் எழுத்துத் தேர்வு, குழு விவாதம் (Group Discussion) அல்லது நேர்காணல் (Interview) ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டண விவரம் (ஜிஎஸ்டி உட்பட):

  • SC/ST மற்றும் மாற்றுத்திறனாளிகள்: ₹175

  • இதர பிரிவினர் (General/OBC/EWS): ₹800 (கட்டணத்தை ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும்)

முக்கியத் தேதிகள்:

  • விண்ணப்பிக்க மற்றும் கட்டணம் செலுத்தக் கடைசி நாள்: பிப்ரவரி 2, 2026.

எப்படி விண்ணப்பிப்பது?

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் யூகோ வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான uco.bank.in-க்குச் சென்று ‘Careers’ பிரிவில் விண்ணப்பிக்கலாம்.

நேரடி விண்ணப்ப லிங்க்: https://onlineappl.ucoonline.bank.in/SPE_RCER/

Related Posts

error: Content is protected !!