டெல்லியில் டிராக்டர் பேரணி: சுப்ரீம் கோர்ட் தலையிட மறுப்பு!

டெல்லியில் டிராக்டர் பேரணி:  சுப்ரீம் கோர்ட் தலையிட மறுப்பு!

மோடி அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லி யில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 50 நாட்களுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த வேளாண்சட்டங்கள் மற்றும் விவசாயிகள் போராட்டம் தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், மூன்று சட்டங்களையும் நிறுத்தி வைக்க சமீபத்தில் உத்தரவிட்டது.

முன்னதாக தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்துவதன் ஒரு பகுதியாக, டெல்லியில் ஜன.26ல் குடியரசு தினத்தன்று பிரமாண்ட டிராக்டர் பேரணி நடத்தப்போவதாக விவசாயிகள் அறிவித்து இருந்தனர்.

இதை அடுத்து குடியரசு தினத்தன்று, டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்துவது உட்பட, எந்தப் போராட்டத்தில் ஈடுபடவும் தடை விதிக்கக் கோரி, மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், விவசாயிகள் பேரணி என்பது சட்டம் ஒழுங்கு சார்ந்தது.

‛டெல்லிக்குள் யாரை அனுமதிக்க வேண்டும், எத்தனை பேரை அனுமதிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் முதல் அதிகாரம் டெல்லி காவல்துறைக்கு உள்ளது. இதில் சுப்ரீம் கோர்ட் தலையிட முடியாது,’ எனக்கூறி பேரணி தொடர்பான மனு மீதான விசாரணையை வரும் 20 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Related Posts

error: Content is protected !!