Masters படிக்க அடுத்த 5-10 வருஷம் உபயோமில்லாத ஊர் UK.!

Masters படிக்க அடுத்த 5-10 வருஷம் உபயோமில்லாத ஊர் UK.!

UK வில் மாஸ்டர்ஸ் சேர்ந்து படிப்பது என்பது இப்போது மிக எளிதாகி விட்டது. Brexitக்கு பின்னர் EU மாணவர்கள் UK வருவது குறைந்துவிட்டது. ஏன் என்றால் EU வில் இருந்தபோது ஐரோப்பிய மாணவர்கள் UK வந்து படித்தாலும் அவர்களுக்கு கல்விக்கட்டணம் இல்லை. ஆனால் 2020இல் இருந்து அவர்களுக்கும் கல்விக்கட்டணம் விதிக்கப்பட்டது. மேலும் EU horizon போன்ற திட்டங்களுக்கு UK apply செய்ய முடியாத நிலையும் இருந்தது.அப்படிப்பட்ட சூழ்நிலையில் பல்வேறு பல்கலைக்கழகங்கள் திவால் நிலைக்கு செல்ல இருந்தது. அப்போது தான் இந்த பல்கலைக்கழகங்களுக்கு ஆபத்துதவிகளாக வந்தவர்கள் தெற்கு ஆசிய மாணவர்கள். குறிப்பாக இந்திய, சீன, பாகிஸ்தான், பங்களாதேஷ் மாணவர்கள்.

இன்றைக்கு பல்வேறு UK பல்கலைக்கழகங்கள் நிதிச்சுமை இல்லாமல் நடக்க காரணம் இவர்கள் கொடுக்கும் fees தான். சரி, இவர்களுக்கு admission கொடுப்பதற்கு குறைந்தபட்ச விதிகளையாவது கடைபிடிக்க வேண்டும் அல்லவா..நீ pass பண்ணி IELTS எழுதிட்டு வா என்று தான் பல்வேறு பல்கலைக்கழகங்கள் மாணவர்களை பணம் கொழிக்கும் இயந்திரங்கள் ஆக பயன்படுத்துகிறார்கள்.நம்ம ஊர் கல்லூரிகளுக்கும் வெளிநாட்டு கல்லூரிக்கும் பெரிய வித்தியாசம் இருக்கு. நம்ம மாதிரி 8*5 வேலை நேரம் இல்லை. நீங்க எடுக்கிற கோர்ஸ்க்கு மட்டுமே கிளாஸ் அட்டென்ட் செய்ய போவீர்கள். வாரத்துக்கு அதிகபட்சம் 12 மணி நேரம் கிளாஸ் இருந்தா பெரிய விஷயம். மீதி நேரத்தில் இந்த மாணவர்கள் பல்வேறு பார்ட் டைம் வேலைகளில் ஈடுபடுகிறார்கள்.

சில மாணவர்கள் குறிப்பாக வட இந்தியர்கள் மற்றும் பாகிஸ்தான் ஆட்கள் பேருக்கு ஒரு கல்லூரியில் enroll செய்துவிட்டு truck ஒட்டுவது, கிச்சன் வேலை என்று பல்வேறு வேலைகளை அவர்களின் வேலை நேரத்தை தாண்டி செய்கிறார்கள். அதற்கான பணத்தை கேஷ் ஆக பெற்று கொள்கிறார்கள்.தற்போது இந்த முறையை சில தமிழ்நாடு மாணவர்களும் செய்கிறார்கள். நீங்க 20 லட்சம், 25 லட்சம் போட்டு UK வந்தீங்க என்றால் அது கிட்டத்தட்ட வீழல் பணமாக ஆகிறது.மேலும் இப்போது UK வில் அதிக வேலையில்லா திண்டாட்டம் இருக்கிறது. குறிப்பாக நீங்க ஒரு சுமார் அல்லது மத்திய தர கல்லூரியில் படித்தால் நிலமை இன்னும் சிக்கலாகும்.

எனக்கு உடனே வேலைக்கு போயி குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய நிலை இருக்கிறது என்றால் UK தவிர்ப்பது நலம். இல்ல, எனக்கு சொத்து இருக்கு, டைம் இருக்கு, இதெல்லாம் சும்மா என்றால் தாராளமாக uk போங்க.இதெல்லாம் தாண்டி நெறய ஏஜன்சிகள் பெயர் கேள்விப்படாத பல பல்கலைக்கழங்களுடன் டீல் போட்டு உங்களை அந்த கல்லூரிக்கு தள்ள பார்ப்பார்கள். நீங்களே அந்த கல்லூரியை குறித்து விரிவாக அலசி ஆராய்ந்து சேருங்கள்.UK government ஈஸியாக விசா கொடுப்பார்கள். காரணம் அவர்களுக்கு 2 வருடம் Cheap labor கிடைக்கிறது என்று. நாம் தான் உறுதியாக என்ன கல்லூரி, என்ன course என்று யோசித்து செய்யுங்கள்.

சேஷாத்ரி தனசேகரன்