வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண் இணைப்பதற்கான கால அவகாசம் அடுத்த ஆண்டு மார்ச் 31 2024 வரை நீட்டிப்பு!

ஆதார் எண் இந்தியரின் ஒரு அடையாள எண்ணாக மாறிவிட்ட நிலையில், அனைத்து குடிமக்களின் வங்கிக் கணக்கு, பான் எண் உள்ளிட்ட முக்கிய கணக்குகளின் எண்ணுடன் ஆதார் இணைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வாக்காளர் அடையாள அட்டையுடனும் ஆதார் எண் இணைக்கும் பணி நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் வாக்காளர் அட்டை-ஆதார் எண் இணைப்பதற்கான கால அவகாசம் வரும் மார்ச் 31 வரை என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் ஓர் ஆண்டு காலம் அவகாசம் நீட்டிக்கப்பட்டு அடுத்த ஆண்டு 2024 மார்ச் 31 ந்தேதி வரை நீட்டித்து, சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.