இந்து ஆலய நிர்வாகமும் இந்துக்களுக்கே என்பதை சுட்டிக்காட்டிய ஐகோர்ட்!

இந்து ஆலய நிர்வாகமும் இந்துக்களுக்கே என்பதை சுட்டிக்காட்டிய ஐகோர்ட்!

அண்மையில் சென்னை ஐகோர்ட் மிக சிறந்த வரலாற்று தீர்ப்பை கொடுத்துள்ளது, இதனால் என்ன தெரிகின்றது என்றால் அடிப்படையில் இந்து காவல் சட்டங்கள் இருக்கத்தான் செய்கின்றன ஆனால் ஏதோ ஒரு சக்தி பல குழப்பங்கள் குழப்பவாதிகள் மூலம் அதை மறைத்து வந்திருக்கின்றது, இப்போது அவையெல்லாம் மெல்ல மெல்ல துலங்குகின்றது என்பது

அதாவது சென்னை ஐகோர்ட்டில் சுஹாயில் எனும் இஸ்லாமியர் ஒரு மனு தாக்கல் செய்கின்றார், அதன்படி கொளத்தூர் கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஒரு பணிக்கு விண்ணப்பித்ததாக்வும் அங்கே இஸ்லாமியன் எனும் அடிப்படையில் தான் வெளியே தள்ளபட்டதாகவும், இது சமூகநீதி சமத்துவ மண் என்பதால் தனக்கு அங்கே சம உரிமை அடிப்படையில் பணிகிடைக்க மதம் ஒரு தடையாக இருக்க கூடாது இதற்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என கோருகின்றார்.

அதாவது கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இந்து கோயில் வருமானத்தில்நடத்தபடுவது, அதை நடத்துவது அறநிலையதுறை.இந்த அறநிலையதுறை ஒரு அரச அமைப்பு, ஆக இது அரசபணி இதனால் இவருக்கு வாய்ப்பு வேண்டும் என ரேஷன் கடை, டாஸ்மாக் கடையில் வேலை வாய்ப்பு போல் இதனை காணவேண்டும் என இந்த சுஹாயில் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.ஆனால் கல்லூரி தரப்போ கோவில் நிதியில் இயங்கும் கல்லூரி இந்துக்களுக்கே வாய்பளிக்க வேண்டும், இங்கே அரச நிதி இல்லை என்பதால் இங்கே இந்துக்களுக்கேத்தான் வாய்ப்பு என வாதிட்டது

இங்கே நீதிபதி இரு தரப்பையும் சுட்டிகாட்டி கவனமாக தீர்ப்பை எழுதியிருக்கின்றார்

“ஆவணங்களை பரிசீலிக்கும் போது, கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியானது, ஒரு சுயநிதி கல்லுாரி என்பதும், அரசிடம் இருந்து எந்த உதவியும் பெறாமல், மாணவர்களிடம் பெறப்படும் கட்டணம் வாயிலாக செலவுகள் மேற்கொள்ளப்பட்டு, கோவிலால் நடத்தப்படுவது என்பதும் தெரிகிறது. இந்தக் கல்லுாரியை துவக்கியது கோவில் என்பதாலும், மத நிறுவனம் என்ற வரையறைக்குள் வருவதாலும், அறநிலையத்துறை சட்டம் இதற்கு பொருந்தும்.

எனவே, ஹிந்துக்கள் மட்டுமே பணி நியமனம் பெற தகுதி உள்ளது. அறநிலையத்துறை சட்டப்படி, இந்தக் கல்லுாரியில் எந்த நியமனம் நடந்தாலும், அவர் ஹிந்து மதத்தை பின்பற்றுபவராக இருக்க வேண்டும். இந்த வழக்கில் தகுதியில்லை; மனு தள்ளுபடி செய்யப்படுகிறது”

நன்றாக கவனியுங்கள், ஒரு நீதிபதி சட்டத்துக்கு உட்ப்படுத்தான் தீர்ப்பு சொல்லமுடியும், அவர் என்ன சொல்லியிருக்கின்றார்?

அறநிலையதுறை சட்டபடி இக்கல்லூரியில் இந்துக்கள் மட்டுமே பணியாற்றமுடியும் என்பது இதன் இன்னொரு ஆழமான அல்லது மறைக்கபட்ட பக்கம் இந்துகோவில்களில் இந்துக்கள் மட்டுமே பணியாற்ற முடியும் என்பது . ஆக இது இந்துக்களுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு, இந்து ஆலயங்களில் இந்துக்கள் மட்டுமே பணியாட்கள் என்பதை சொல்ல வைக்கும் தீர்ப்பு

ஆந்திராவில் கோவில்களில் இந்துக்கள் மட்டும் என அறிவிக்கபட்டிருப்பது அரச உத்தர்வு, ஆனால் தமிழகத்தில் சட்டமே அதைத்தான் சொல்கின்றது என்பதை நீதிமன்றம் சுட்டிகாட்டுகின்றது. இது நிச்சயம் ஒரு வெளிச்சம், இந்து கோவில் நடத்தும் கல்லூரியே இந்துக்களுக்கு என்றால், இந்து ஆலய நிர்வாகமும் இந்துக்களுக்கே என்பதில் என்ன மாற்றுகருத்து இருக்கமுடியும்? சென்னை ஐகோர்ட் அழகான கயிற்றை வீசியிருக்கின்றது. அதை பற்றிகொண்டு இந்து கோயில்களை மாற்றுமத நிர்வாகிகளிடமிருந்து மீட்க வேண்டியது இந்து அமைப்புகளின் கடமை, அதை சரியாக செய்வார்கள் என எதிர்பார்ப்போம்.

அதிக விவரம் வேண்டுவோர் இணைக்கப்பட்டுள்ள தகவல்களை கொண்டு இணைவழியாக தீர்ப்பை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

எடிட்டோரியல்

error: Content is protected !!