பயோ கெமிக்கல் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் – நடப்பது என்ன?

பயோ கெமிக்கல் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் – நடப்பது என்ன?

மருத்துவமனைகளில் உபயோகிக்கப்படும் சிரிஞ்சிகள், குழாய்கள், பாட்டில்கள் போன்ற பல்வேறு பொருட்களை உபயோகித்து முடித்த பிறகு சட்டென்று தூக்கிப் போட முடியாது. கூடாது. அதற்கென்றிருக்கும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடம் அதை ஒப்படைத்துவிட வேண்டும். அதை நல்லபடியாக பிரச்சனையில்லாமல் கழித்து விடும் வேலையை அந்நிறுவனம் செய்யும். அதற்கு ஒரு கிலோவுக்கு 39 ரூபாய் மருத்துவமனை கொடுக்க வேண்டும்.

waste management may 12

இன்னொரு பக்கம் சட்டவிரோதர்கள் மருத்தவமனையிடம் அந்த மெடிக்கல் வேஸ்டை விலைக்கு கேட்கிறார்கள். ஒரு கிலோ மெடிக்கல் வேஸ்டுக்கு அவர்கள் 49 ரூபாய் பணம் கொடுக்கிறார்கள். 39 ரூபாய் கைக்காசு போவதை மருத்துவமனை விரும்புமா? 49 ரூபாய் வரவு வருவதை விரும்புமா? ஹூம்.. இதென்ன கிறுக்குத்தனமான கேள்வி பணம் வர்றததான் விரும்பும். அதனால் என்ன செய்கிறார்கள் என்றால் பேருக்கு பயோ மெடிக்கல் வேஸ்டை அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்துக்கு கொடுப்பது போல கொடுத்து மிச்சம் பயோ மெடிக்கல் வேஸ்டை நல்ல விலைக்கு விற்றுவிடுவது நம் மருத்துவமனைகளின் ஸ்டைலாக இருக்கிறது.

சரி இப்போ இந்த அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள்கிட்ட பயோ மெடிக்கல் வேஸ்ட கொடுக்கனும் இல்லையா?அது எவ்வளவு கொடுக்கிறாங்கன்னா ரொம்ப கம்மியா கொடுக்கிறாங்க. சும்மா கணக்குக்குதானே கொடுக்கிறாங்க. ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஒரு பெட்டுக்கு 40 கிராம் வேஸ்டுதான் கொடுக்கிறாங்களாம். 40 கிராம்ங்கிறது எவ்வளவு குறைவான எடை. ஒரு பெட்டுக்கு 40 கிராம்தாம் கணக்கு வருதுன்னா இதுல எவ்வளவு அநியாயம் நடக்குது பாருங்க.

எமர்ஜென்சி ஆப்ஸ்டிரிக் கேர்ல ஒரு பெட்டுக்கு 55 கிராம் வேஸ்ட்

எக்மோர் குழந்தைகள் மருத்துவமனை 88 கிராம் வேஸ்ட்

கீழ்பாக்கம் மருத்துவமனை 44 கிராம் வேஸ்ட்

வாலண்டரி ஹெல்த் சர்வீஸ் 34 கிராம் வேஸ்ட்தான் வருதாம்.

தமிழ்நாட்ல நோயாளிகளே இல்லைங்கிறது மாதிரி இருக்குல்ல.

மிச்சம் எல்லாத்தையும் வித்துபுடுறாங்க நம்ம ஆட்கள்.

அப்படி வாங்குற பயோ மெடிக்கல் வேஸ்ட அரைகுறையா சுத்தம் செய்து அதை மறுபடியும் மருத்துவமனைக்கே வித்துபுடுறாங்க பய புள்ளைகள்..! இதனால என்ன பிரச்சனை வருது.

2014 ஆம் ஆண்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு ஹெமோ டயாலிஸிஸ் செய்ய வந்த 16 நோயாளிகளுக்கு ’ஹெப்பாட்டிஸிஸ் சி’ நோய் புடிச்சிகிட்டதாம். காரணம் பார்த்தா இந்த மருத்தவ உபகரணங்கள்தானாம்.

அதுல ரெண்டு நோயாளிங்க செத்துட்டாங்களாம்.

இன்னைக்கு இந்தியன் எக்ஸ்பிரஸ்ல இது பத்தின கட்டுரை வந்திருக்கு.

இந்தியர்கள் ஃபாலோ பண்றது ஒரே ஒரு பாலிசிதான்

“காசு இல்லாதவங்க எல்லாம் செத்துப் போங்கடா” என்பதுதான் அந்த பாலிசி.
மனசாட்சியைத் தொட்டு யோசித்துப் பாருங்கள்.
நம்மை அறியாமல் அந்த பாலிசியை அங்கீகரித்திருப்போம்.

இது குறித்து ஷேர் செய்யப்பட்ட ஒரு பதிவில் இதே துறையில் (கழிவு மேலாண்மையில்) பொறுப்பாளராக இருக்கும் சத்தியப பெருமாளின் கமண்ட்:
“”Sathyaperumal Balusamy இந்தக் குற்றச்சாட்டை மறுக்கிறேன். குறைந்தபட்சம் எங்களது மருத்துவமனையில் இப்படி நடப்பதில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன். எங்களது மருத்துவமனையின் “பயோ மெடிக்கல் வேஸ்ட் மேனேஜ்மெண்ட்” ஐ மேற்பார்வையிடும் பொறுப்பில் இருப்பதால் இதை உறுதியாகக் கூறுகிறேன். நாள்தோறும் உற்பத்தியாகும் மருத்துவக்கழிவுகளை உரியமுறையில் தரம் பிரித்து எடையிட்டு, அரசால் அங்கீகரிக்கப்பட்ட மேலாண்மை நிறுவனங்களிடம் ஒப்படைக்கிறோம். மருத்துவக்கழிவுகளை மேலாண்மை செய்வதற்காக அந்நிறுவனங்களுக்கு நாங்களே பணமும் கொடுக்கிறோம். இந்தப் பதிவில் கொடுக்கப்பட்டிருக்கும் கணக்குவழக்குகள் மிகவும் மேலோட்டமானவை. 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையில் உற்பத்தியாகும் மருத்துவக்கழிவுகளைப் படுக்கைக்கு இவ்வளவு எனப் பகுத்தால் மிகவும் குறைவான எடையாகவே தோன்றும்.

ஒவ்வொரு நோய்ப்பிரிவுக்கும், நோயாளிக்குமான சிக்சைமுறைகள் மாறுவதைப் போல் உற்பத்தியாகும் மருத்துவக் கழிவுகளும், அதன் அளவுகளும் வார்டுகளுக்கேற்ப மாறுபடும். சில வார்டுகளில் குறைவாகவும் சிலவற்றில் அதிகமாகவும். அவற்றை ஒன்று திரட்டி மொத்த உள்நோயாளர் படுக்கைகளின் எண்ணிக்கையுடன் பகுக்கும் பொழுது நம்பமுடியாத அளவுக்கு ஒவ்வொரு படுக்கையின் சராசரி மருத்துவக்கழிவுகள் மிகவும் குறைவாகவே இருக்கும்.

இதுமட்டுமின்றி மருத்துவக்கழிவு மேலாண்மைக்காக மேலாண்மை நிறுவனங்களிடம் பெறப்படுவதாகக் குற்றம் சாட்டப்படும் தொகையை வரவு வைக்கும் வழிமுறைகளும் இல்லை. அப்படி இருப்பின் அது சட்டவிரோதமானதும் ஆகும். தனி நபரால் மருத்துவக் கழிவுகளைத் தாம் விரும்பிய நிறுவனங்களிடம் விற்றுப் பணம் பெற்றுக் கொள்வதெல்லாம் நடைமுறையில் அவ்வளவு எளிதான காரியங்களும் அல்ல.

மருத்துவக்கழிவு மேலாண்மைக்கான வழிமுறைகளைத் தெளிவாக வரையறுத்துள்ளது மட்டுமல்லாமல் அதற்கான பயிற்சியையும் சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு அரசு முறையாக வழங்கியுள்ளது. ஒவ்வொரு மருத்துவமனையின் மருத்துவக்கழிவு மேலாண்மை பற்றிய தகவல்களையும் மாதந்தோறும் அரசு பெற்றுக்கொள்கிறது.

நடைமுறையில், மருத்துவக்கழிவு மேலாண்மைக்காக மிகவும் மெனக்கெட்டுக்கொண்டிருக்கிறோம். தற்போதுள்ள அரசு மட்டுமல்ல இதற்கு முந்தைய தமிழக அரசின் நிலையும் இதுதான். மருத்துவக்கழிவு மேலாண்மையை அரசின் உரிய வழிகாட்டுதல்களின்படிச் செய்வதற்காக இயங்கும் குழுக்களின் பாடு அசாதாரணமானது.

மருத்துவக்கழிவுகளை விலைகொடுத்து வாங்கி அவற்றை உரிய வழிமுறைகளில் மேலாண்மை செய்யாமல் அப்படியே மீண்டும் மருத்துவமனைகளுக்கு வழங்குவதெல்லாம் இயலாத செயல். அப்படி வழங்கப்பெறின் அத்தனை நோயாளிகளும் சொல்லொணாத் துயருக்கு ஆளாகவேண்டியிருக்கும். ஆனால், நடைமுறையில் இங்கொன்றும் அங்கொன்றுமாக நேரிடும் மருத்துவ விபத்துகளுக்கு மொத்த மருத்துவக்கழிவு மேலாண்மைத் திட்டத்தையும் பொறுப்பாக்கி ஊழற்பழி சுமத்துவது ஒருதலைச் சார்பானதாகவும் சரியான புரிதலற்றதாகவுமே இருக்கும்.

மருத்துவக்கழிவுகளை விலைக்கு விற்றுச் சம்பாதிப்பது லாபமென்றால் எதற்காகச் சில மாநிலங்களில் அவற்றை அண்டை மாநில எல்லைகளில் கொட்டப்போகிறார்கள்? ஊராட்சி/ நகராட்சி/ மாநகராட்சி அமைப்புகளின் பொது திடக்கழிவு மேலாண்மையை விடவும் மருத்துவக்கழிவு மேலாண்மை சிறப்பாகச் செய்யப்படுகிறது என்றால் மிகையில்லை. அதில் அரசின் அக்கறையும் பங்கும் மகத்தானவை.

Hansa Hansa

Related Posts