தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் – பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் – பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அறிவிப்பு!

டப்பு 2023 – 2024 ம் ஆண்டுக்கான பள்ளிக்கல்வித் துறையின் நாட்காட்டியை அமைச்சர் அன்பில் மகேஸ் கடந்த மாதம் சென்னையில் வெளியிட்டார். இதில், கோடைகால விடுமுறை முடிந்து ஜூன் ஒன்றாம் தேதி 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும். 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 5 ஆம் தேதி பள்ளிகள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இன்றுவரை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பள்ளிகள் திறப்பு தேதிகளை மாற்ற பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்று, தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று (மே 26) அறிவித்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் கூறுகையில், “முதல்வரின் ஆணைக்கிணங்க கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாணவர்களின் உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு ஜூன் மாதம் 7-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்” இவ்வாறு அவர் கூறினார்.

error: Content is protected !!