கனடாவில் உத்தமத்தின் (INFITT) 16-வது உலகத் தமிழிணைய மாநாடு 2017!

கனடாவில் உத்தமத்தின் (INFITT) 16-வது உலகத் தமிழிணைய மாநாடு 2017!

உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் (உத்தமம், INFITT) 16வது தமிழிணையமாநாடு 2017,  கனடாவில் டொராண்டோ (Toronto) மாநகரில், தொராண்டோபல்கலைக்கழகசுகார்பரோ (Scarborough) வளாகத்தில் ஆகஸ்ட் மாதம் 25-27 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இக்கருத்தரங்கு வாட்டர்லூ பல்கலைக்கழகத்தின் பாங்கு அறிதிறன் இயந்திர அறிவுத்திறனுக்கான நடுவத்தின்(University of Waterloo Centre for Pattern Recognition and Machine Intelligence)ஆதரவோடும், .இ.இ.இ கனடா(IEEE Canada)வின் ஆதரவோடும் தொராண்டோ பல்கலைக்கழகம், சுகார்பரோவின் துணையோடும் நடைபெறுகின்றது. இதுவே கனடாவில் நடக்கும் முதல் உத்தமம் மாநாடு. இவ்வாண்டு கனடாவின் 150 ஆண்டாகவும் இருப்பது சிறப்பு.

இக்கருத்தரங்கத்தில் படிக்கப்படும் கட்டுரைகள் அடங்கிய நூலும் விழா மலர் ஒன்றும் வெளியிடப்படவுள்ளன. கட்டுரைகள் ஆங்கிலத்திலும் தமிழிலும் உள்ளன. இக்கருத்தரங்கில் ஏறத்தாழ 100 ஆய்வாளர்களும் மற்றோரும் கலந்துகொள்வார்கள். கருத்தரங்கத்தில் கலந்துகொள்ள நுழைவுக் கட்டணம் $150 கனடிய வெள்ளி. உத்தமத்தின் உறுப்பினர்களுக்கு $50 கனடிய வெள்ளி கழிவு உண்டு. ஐ.இ.இ.இ உறுப்பினர்களுக்கு $25 கனடிய வெள்ளி கழிவு உண்டு. சில அறிமுக பட்டறைகளில் மட்டும் பங்கு கொள்வோர் வெறும் $30 கனடிய வெள்ளி கட்டினால் போதும். தொடக்கவிழா, சிறப்புச் சொற்பொழிவுகள் போன்ற சில நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் இலவசமாகக் கலந்துகொள்ளலாம். மூன்று சிறப்புச் சொற்பொழிவுகள் ஏற்பாடாகி இருக்கின்றன.

மாநாட்டின் வலைத்தளம்: http://tamilinternetconference.org/

தொடர்புகளுக்கு:

மாநாட்டுத் தலைவர் பேராசிரியர் செ . இரா. செல்வக்குமார் வாட்டர்லூ பல்கலைக்கழகம் [email protected]

உள்நாட்டு ஏற்பாட்டுக்குழுத் தலைவர் பேராசிரியர் கு. பொன்னம்பலம் [email protected]

பன்னாட்டு ஏற்பாட்டுக் குழுத் தலைவர். திரு இளந்தமிழ், மலேசியா

பரிசுக்குழுத்தலைவர் திரு ஏ. இளங்கோவன், இந்தியா

உத்தமத்தின் செயல் இயக்குநர் திரு தவராஜா தவரூபன் [email protected]

உத்தமத்தின் தலைவர் திரு செல்வராஜ் முரளி [email protected]

error: Content is protected !!