ஆண்டு தோறும் கண் பார்வையற்றோர் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்குது!

நமது நாட்டில் உடல் உறுப்பு தானம் பெற, பல ஆண்டுகள் காத்திருக்கும் நிலை உள்ளது. மக்களிடம் உடல் உறுப்பு தானம் அளிப்பதில் உள்ள தவறான எண்ணங்களை நீக்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். சர்வதேச அளவில், 23.5 சதவீதம் பேர், கண் பார்வையற்றவர்களாக உள்ளனர். 2020ம் ஆண்டில், விழி வெண்படல பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை உள்ளது என்று கடந்த ஆண்டு வெளியான தகவல் அறிக்கைக்கே உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில் தற்போது சர்வதேச அளவில் தற்போது பார்வையற்றோரின் எண்ணிக்கை 3 கோடியே 60 லட்சம். இந்த நிலையில் சர்வதேச அளவில் தற்போது 3 கோடியே 60 லட்சம் கண் பார்வையற்றோர் உள்ளனர். இந்நிலையில் 2050-ம் ஆண்டில் அவர்களது எண்ணிக்கை 11 கோடியே 50 லட்சம் ஆக உயரும் அபாயம் உள்ளதாக இங்கிலாந்தில் உள்ள ஏஞ்சிலியா ருக்சின் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து 1.88 நாடுகளில் 1980 முதல் 2015-ம் ஆண்டு வரை ஆய்வு நடத்தப்பட்டது.
அதில் 2050-ம் ஆண்டில் 11 கோடியே 50 லட்சம் பேர் கண் பார்வையற்றோராக இருக்க வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது. அவர்களில் பெரும்பாலும் வளர்ந்து வரும் ஆசிய நாடுகள் மற்றும் ஆப்பிரிக்காவில் சகாரா பாலைவ னத்தை ஒட்டியுள்ள நாடுகளில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இனி வரும் ஆண்டுகளில் கண் பார்வையற்றோர் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து 2050-ம் ஆண்டில் 11 கோடியே 50 லட்சமாக உயரும். அதாவது தற்போதைய அளவைவிட 3 மடங்கு அதிகரிக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
இதற்கு வயது முதிர்ச்சியே காரணம் என கூறப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் வயது முதிர்ந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில் கண் பார்வையற்றோரின் எண்ணிக்கையும் உயரும் என கணக்கிடப்பட்டுள்ளது. சிகிச்சையின் மூலம் இவர்களின் கண் பார்வையற்ற நிலையை சரி செய்ய முடியாது என்றும், கண் பார்வை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 58 கோடியே 80 லட்சமாக உயரும் எனவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.