June 9, 2023

அடுத்த தீபாவளிக்கு பப்ளிக் ஸ்டார் படம் ஒண்ணு வர சான்ஸ் இருக்குது!

இப்போதெல்லாம் சினிமா நடிக்க ஆசை உள்ளவர்கள் அந்த படத்துக்கு ஃபைனாஸ் செய்ய தெரிந்தால் போதும். அந்த டெக்னிக்கில் தப்பாட்டம் படம் மூலம் கதாநாயகனாக எண்ட்ரி ஆனவர் துரை சுதாகர். முதல் படத்திலேயே தனக்கு ’பப்ளிக் ஸ்டார்’ என்ற அடை மொழியை கொடுத்து கொண்டு அந்தப் படத்தில் வந்து போன அவர் ஒரு வக்கீல். தஞ்சாவூர்காரரான இவர் அங்கே சமூக சேவைகள் செய்வதில் அதிக ஆரவம் காட்டுவதால் ஊர் மக்கள் வழங்கிய பப்ளிக் ஸ்டார் என்ற சுதாகரின் அடிப்படை தொழில் ரியல் எஸ்டேட் -டாம். அதே நேரம் சினிமா ஆசை .

உடனே இக்கட்டுரையின் முதல் லைன் ட்ராக்கில் பயணித்து “இது வரை தப்பாட்டம் , ஜூலியும் நாலு பெரும் உட்பட பத்து படங்களில் நடித்து விட்டேன் . ரியல் எஸ்டேட் தொழிலும் சிறப்பாகப் போகிறது என்னங்க செய்யறது என்னை நடிக்க வைச்சா பொருளாதார உதவியும் கிடைக்கும் என்று நினைத்து வருகிறார்கள். அதற்காக எல்லா படங்களுக்கும் நான் அப்படி செய்ய முடியாது . நல்ல கதை நல்ல கதாபாத்திரம் இருந்தால், அந்தப் படத்துக்கு கை கொடுப்பது தவறு இல்லை என்று எண்ணுகிறேன் . அதே நேரம் இதற்கெல்லாம் அப்பாற்பட்டு ஒரு நடிகனாக நல்ல கதாபாத்திரத்துக்கு காத்திருக்கிறேன் ” என்கிறார் . அப்படீன்னா? என்று கேட்டதற்கு ‘என்னை வச்சு ஹீரோவாத்தான் படம் பண்ணனுமுன்னு இல்லை. டாப் ஹீரோக்களோட சப்போர்ட்டிங் ரோலில் வர்ற மாதிரி சான்ஸ் குடுத்தா கூட என்னாலே முடிஞ்ச சப்போர்ட் பண்ண தயாரா இருக்கேன்” என்றார்.

மேலும் பேச்சுக் கொடுத்த போது, “என் குணம் தெரிஞ்சு நிறைய பேர் வந்து கதை சொல்றாங்க.. ஆனா இப்போத்திய டெக்னாலஜி போக்கைக் கூட தெரிஞ்சி வச்சிக்காம பத்து வருஷத்துக்க்கு முந்தைய கால கட்டத்து கதையை பண்ணலாமுன்னு வந்து வற்புறுத்துறாங்க. நெசமா என் முகத்துக்காக ஒரு படத்தை தியேட்டருக்கு வருவாங்கண்ணு நாம் நம்பத் தயார இல்லை. அதே நேரம் பிரபலமான இயக்குநர்கள் நல்ல கதை திரைக்கதையுடன், மக்கள் அறிந்த நடிகர்கள் , வியாபாரத்தை மீறி கையைக் கடிக்காத பட்ஜெட் இவற்றோடு எனக்கு ஒரு வேல்யூவான ரோல் இருக்கும் பட்சத்தில் அந்த படத்தை முழுசாக தயாரிக்கவும் தயார்.” என்கிறார்.

ஆக அடுத்த தீபாவளிக்கு பப்ளிக் ஸ்டார் படம் ஒண்ணு வர சான்ஸ் இருக்குது!