பார்த்தவர்கள் அத்தனை பேரும் பாராட்டும் ‘அருவி’ – திரைப்படம்!

பார்த்தவர்கள் அத்தனை பேரும் பாராட்டும் ‘அருவி’ – திரைப்படம்!

ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு , எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அருவி’.
இத்திரைப்படத்தை பிரபல இயக்குநர் கே.எஸ். ரவிகுமாரிடம் துணை இயக்குநராகப் பணியாற்றிய அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கியுள்ளார். உலக மக்கள் அனைவருக்கும் பொருந்தும் சமூக அரசியல் படமான இத்திரைப்படத்தின் கதாநாயகிக்கான தேர்வு மட்டும் 8 மாதம் நடந்துள்ளது. தேர்வில் கலந்து கொண்ட 500க்கும் மேற்பட்டவர்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர் தான் நாயகி அதிதி பாலன்.

இப்படத்தில் அதிதி பாலன் ‘அருவி’ என்ற டைட்டில் கேரக்டரில் நடித்துள்ளார். அருவி என்னும் பெண்ணின் வாழ்க்கையில் நடக்கக்கூடிய சுவாரசிமான விஷயங்களின் தொகுப்பு தான் இப்படத்தின் கதைக்களம். ஒரு கோணத்தில் இருந்து பார்த்தால் இப்படம் அருவி என்ற பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கை போல் இருக்கும். இன்னொரு கோணத்தில் இப்படம் அருவி சந்திக்கும் சுவாரசியமான சம்பவங்கள், அவள் கடந்து செல்லும் பாதையில் நிகழும் பிரச்சனை, அவள் சந்திக்கும் மனிதர்கள் என சமூகம் சார்ந்து பேசும் ஒரு கதையாக இருக்கும்.

இப்படத்தில் முகமது அலி பாய்க் என்ற ஹைதராபாத்தை சேர்ந்த தியேட்டர் ஆர்டிஸ்ட், அஞ்சலி வரதன் என்ற திருநங்கை , லட்சுமி கோபால் சாமி என்ற கன்னட நடிகை , மதன் என 20க்கும் மேற்பட்டர்வர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வெளியாவதற்கு முன்னரே ஷாங்காய், மும்பை சர்வதேசத் திரைப்பட விழாக்களிலும், கேரளா தேசிய திரைப்பட விழாவிலும், தி ஹபிடேட் திரைப்பட விழா டெல்லி, தி பயோஸ்கோப் குளோபல் திரைப்பட விழா பஞ்சாப் என பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படம் குறித்து சமூகத்தில் நடக்கும் அவலங்களைத் தனக்குக் கிடைத்த இடங்களிலெல்லாம் ஆணித்தனமாகப் பதிவுசெய்து அதனை வெற்றிகரமாகவும் வெளிக்கொண்டுவந்துள்ளனர் அறிமுக இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன் மற்றும் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு. மேலும்  இத்திரைப்படத்தின் பிரத்யேக சிறப்பு காட்சியை கண்டுகளித்த எழுத்தாளர்கள்,சமூக ஆர்வலர்கள், ஊடகத்துறை யினர்,அரசியல் பிரமுகர்கள், இயக்குநர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என அனைவரும் பாராட்டி வருகிறார் கள்.சமீபத்தில் படத்தை பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன் படத்தையும்,படத்தை இயக்கியுள்ள அறிமுக இயக்குநர் அருண்பிரபுவையும்,படத்தில் தன்னுடைய நடிப்பு திறமையால் அனைவரையும் கவர்ந்த கதையின் நாயகி அதீதி பாலனையும்,மற்ற கதாபாத்திரங்களில் நடித்தவர்களையும் ட்விட்டரில் பாராட்டி இருந்தார்.இப்படி படத்தை பார்த்த அனைவரும் படத்தை பற்றி தங்களுடைய சமூக வலைதளங்களில் பாராட்டி வரும் படம் விரைவில் ரிலீஸாக இருக்கிறது.

error: Content is protected !!