டிக்டாக்குக்கு மாற்றாக இன்ஸ்டாகிராமில் வந்த புதிய ஆப் – ’ரீல்ஸ்’!

டிக்டாக்குக்கு மாற்றாக இன்ஸ்டாகிராமில் வந்த புதிய ஆப் – ’ரீல்ஸ்’!

டிக்டாக் செயலி தடைசெய்ததை தொடர்ந்து, அதற்க்கு மாற்றான செயலிகள் வந்தாலும், டிக்டாக்கை போல வரவில்லை என பயனர்கள் கூறி வருகின்றனர். அதுமட்டுமின்றி, டிக்டாக்கின் இந்த இடத்தை பிடிப்பதற்கு, பல புதிய செயலிகள் வந்துகொண்டே இருக்கின்றது. இந்நிலையில், பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் செயலி, இதுவரை பலகோடி மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது, அதனால், இந்த செயலியில் “ரீல்ஸ்” (Reels) எனும் வசதியை அறிமுகப்படுத்தியது.

இதன்மூலம், உலகளவில் நட்சத்திரங்களை உருவாக்கலாம் என பேஸ்புக் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் அஜித் மோகன் தெரிவித்தார். அதுமட்டுமின்றி, இன்று இரவு 7.30 மணி முதல் இந்த வசதி உங்கள் இன்ஸ்டாகிராம் செயலியில் வந்து விட்டது எனவும் தெரிவித்தார்.

மேலும் இதுகுறித்து தெரிவித்த அவர், இந்த ரீல்ஸில் டிக்டாக் செயலி போலவே, பின்னணி இசையில் 15 நொடிகள் விடியோவாக பதிவிட்டு நடிக்கலாம். பிரேசிலில் சோதனை முயற்சிக்காக இந்த சேவை அறிமுகமானதை தொடர்ந்து, பிரான்ஸ், ஜெர்மனியிலும் அறிமுகமானது. இதற்க்கு தேவையான பாடல்களுக்கு பேஸ்புக் நிறுவனம், இந்தாண்டு ஜூன் மாதம் முதல் இசை நிறுவனமான சரேகாமாவுடன் உலகளாவிய உரிம ஒப்பந்தத்தை கையெழுத்திட்டது. அதன் மூலம், 25-க்கும் மேற்பட்ட மொழிகளில் திரைப்படம், பக்தி, ஆல்பம், இசை உள்ளிட்ட பல்வேறு வகைகளில் 100,000 க்கும் மேற்பட்ட பாடல்களுக்காக ஒப்பந்தப் செய்யப்பட்டது.

அதுமட்டுமின்றி, இந்தியாவில் சிறந்த இசை நிறுவனங்களாக டி-சீரிஸ், ஜீ மியூசிக், உள்ளிட்ட நிறுவனங்களில் தொடர்பு கொண்டுள்ளது. இதன் மூலம் அந்த வசதி மூலம் வீடியோ பதிவிடும் நபர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் என அவர் தெரிவித்தார். மேலும், இந்த சேவையை சோதிக்கும் நான்காம் நாடு “இந்தியா” எனவும் அவர் தெரிவித்தார்.

Related Posts