பட்டபடிப்புக்கான கால அவகாசத்தை மாணவர்களே முடிவு செய்யலாம் -யுஜிசி அறிவிப்பு=முழு விவரம்

பட்டபடிப்புக்கான கால அவகாசத்தை மாணவர்களே முடிவு செய்யலாம் -யுஜிசி  அறிவிப்பு=முழு விவரம்

ல்வியை மேம்படுத்தவும் ஒழுங்குபடுத்தவும் மத்திய அரசு அவ்வப்போது தேசிய கல்விக் கொள்கையை (National Policy on Education) உருவாக்கி வருகிறது. அந்த வகையில் முதல் தேசிய கல்விக் கொள்கையை 1968-ஆம் ஆண்டில் பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான அரசு உருவாக்கி இருந்தது. அடுத்ததாக இரண்டாவது தேசிய கல்விக் கொள்கையை 1986-ஆம் ஆண்டில் பிரதமர் ராஜீவ் காந்தி தலைமையிலான அரசு வெளியிட்டது. அந்த கல்வி கொள்கை தான் தற்போது நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் மூன்றாவது தேசிய கல்விக் கொள்கையை 2020-ஆம் ஆண்டில் பிரதமர நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு வெளியிட்டது.

ஆனாலும் இந்தியா முழுவதும் இந்த கல்வி கொள்கை இன்னும் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை.. இதை நடைமுறைப்படுத்த மத்திய அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இந்த திட்டத்தில்தான் மும்மொழி கொள்கை, நுழைவுத் தேர்வு, தாய்மொழி வழிக்கல்வி, டிகிரியை தாமதமாக அல்லது முன்கூட்டியே முடிக்கலாம் என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன. இந்நிலையில் பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) சார்பில் தேசிய கல்விக்கொள்கை-2020-ஐ நடைமுறைப்படுத்துவது தொடர்பாக தென்மண்டல அளவில் தன்னாட்சி கல்லூரிகளுக்கான ஒருநாள் கருத்தரங்கம் சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் கடந்த இரண்டு வாரம் முன்பு நடந்தது.

அந்த கூட்டத்தில் பட்டப்படிப்பு முடிக்கும் காலம் குறித்து முக்கிய முடிவு ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து யு.சி.ஜி. தலைவர் ஜெகதீஷ் குமார் கூறியது:

மாணவர்கள் தங்கள் கற்றல் திறன்களின் அடிப்படையில் தங்கள் படிப்பு காலத்தை குறைக்க அல்லது நீட்டிக்க முடிவு செய்யலாம். மாணவர்கள் இளங்கலை பட்டப்படிப்பை முன்கூட்டியே படித்து முடிக்கும் புதிய முறைக்கும் படிப்பில் பின்தங்கிய மாணவர்கள் பட்டப்படிப்பை முடிக்க கூடுதல் கால அவகாசம் எடுத்துக்கொள்ளும் புதிய முறைக்கும் யு.ஜி.சி., கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது.

அதன்படி மாணவர்கள் விரும்பினால் 4 ஆண்டுகள் அல்லது 3 ஆண்டு கால இளங்கலை பட்டப்படிப்பை ஓராண்டு அல்லது 6 மாதங்களுக்கு முன்னரே படித்து முடித்துவிடலாம். தேவைப்பட்டால் 6 மாதங்கள் அல்லது ஓராண்டு கூடுதல் காலம் எடுத்துக் கொள்ளலாம். இந்த புதிய முறை வரும் கல்வி ஆண்டில் அமலுக்கு வருகிறது.

உயர்கல்வி நிறுவனங்கள் மாணவர்களின் கற்றல் திறன்களை மதிப்பிடுவதற்கு குழுக்களை அமைக்கும். மாணவர்களின் வேலை வாய்ப்புத் திறனையும், சுயதொழில் ஆர்வத்தையும் மேம்படுத்தும் வகையில் அவர்களுக்கு திறன்சார்ந்த கல்வி அளிக்கப்பட வேண்டும்.

error: Content is protected !!