டோக்கியோவில் வைரஸ் பரவல் : அவசர நிலை அறிவிப்பு!

டோக்கியோவில் வைரஸ் பரவல் : அவசர நிலை அறிவிப்பு!

ப்பான் நாட்டில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளது ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள் மற்றும் அதிகாரிகளின் வருகையால் தொற்றுநோயின் புதிய அலை ஏற்படலாம் என்ற பரவலான கவலைகளுக்கு மத்தியில், விளையாட்டுகளில் பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டாம் என மருத்துவ நிபுணர்கள் பல வாரங்களாக வலியுறுத்தி வருகின்றனர். இந் நிலையில் தற்போது ஜப்பான் அரசு டோக்கியோவில் அவசரநிலையை அறிவித்துள்ளது. அதனால் வரும் 23ஆம் தேதி டோக்கியோ நகரில் ஆரம்பமாக உள்ள ஒலிம்பிக் போட்டிகளை காண பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

டோக்கியோவில் அவசரகால நிலை ஜூலை 12 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 22 வரை அமலுக்கு வருகிறது. இதை நாட்டின் கொரோனா வைரஸ் விவகாரங்களை கவனிக்கும் ஜப்பான் பொருளாதார அமைச்சர் யசுடோஷி நிஷிமுரா கூறினார். ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8 வரை நடக்கவிருக்கிறது. இந்த காலகட்டத்தில் டோக்கியோவில் வைரஸ் எமர்ஜென்ஸி அறிவிக்கப்பட்டுள்ளது. உலகில் இப்படியொரு அவசரநிலை அறிவிக்கப்படுவது இதுவே முதல்முறையாக இருக்கலாம். கொரோனா வைரஸின் பரவல் மிக முக்கியமான நிகழ்வுகளைக் கூட மாற்றிவிட்டது.ஜப்பானில் பிற நாடுகளைப் போல கொரோனா பாதிப்பு மிக அதிக அளவில் இல்லை என்றாலும், இதுவரை 8,10,000 க்கும் மேற்பட்டவர்கள் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை 14,900 ஆக உள்ளது.

இந்நிலையில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி குழு நடத்திய ஆலோசனையில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கருத்தில் கொண்டு அனைத்து போட்டிகளையும் பார்வையாளர்களின்றி நடத்துவதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதனை டோக்கியோ ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழு தலைவர் Seiko Hashimoto உறுதி செய்துள்ளார். “ஒலிம்பிக் போட்டிகளை காண முன்கூட்டியே டிக்கெட் வாங்கியவர்களுக்காக நான் வருந்துகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts

error: Content is protected !!