தூக்கத்தைக் கெடுக்கும் பாம்புகள்: உலகம் முழுக்க இதுதான் ‘டிரெண்டிங்’ கனவா?

ண்ணை மூடினால் போதும்… சிலருக்குப் பணம் கொட்டும், சிலருக்குப் பழைய காதலி வருவார், சிலருக்கோ பாம்பு துரத்தும். காலையில் எழுந்ததும் “ஏன் இப்படி ஒரு கனவு வந்தது?” என்று கூகுளில் தேடுவது தான் இப்போது உலக மக்களின் முக்கிய வேலையாக இருக்கிறது. அப்படி மக்கள் தேடிய தகவல்களை வைத்து ஒரு உலக வரைபடமே தயார் செய்திருக்கிறார்கள். அதைப் பார்த்தால், நமக்கெல்லாம் கனவில் கூட ‘ஒரே ரத்தம்’ தான் என்பது புரியும்.

கனவுகள் ஒன்றும் சும்மா வருவதில்லை; அது நம் ஆழ்மனதின் ஒரு ‘சேட்டை’.

நமக்கு ஒரு ஆசை இருந்தால் அது ‘இனிப்புக் கனவாக’ வரும், அதுவே பயமாக இருந்தால் நம்மை அலற வைக்கும் ‘பயங்கரக் கனவாக’ மாறும். வாழ்க்கையில் ஏதோ ஒரு சிக்கல் தீராமல் இருந்தால், அந்தப் பிரச்சனையே மீண்டும் மீண்டும் ஒரு கனவாக வந்து நம்மைப் பிடிக்கும். இப்படி மனதிற்குள் ஒளிந்திருக்கும் ரகசியங்கள் தான் கனவுகளாகத் திரையிடப்படுகின்றன.

இப்படித் தனிப்பட்ட விஷயமாக இருந்த கனவுகள், இப்போது ஒரு உலகளாவிய ஆய்வின் மூலம் வியப்பூட்டும் உண்மைகளைச் சொல்லியிருக்கின்றன.

இந்த ஆய்வின் படி, இந்தியா உட்பட சுமார் 52 நாடுகளில் மக்கள் ‘பாம்புகள்’ கனவில் வருவதைப் பற்றித்தான் விடிய விடியத் தேடுகிறார்கள். ஆசியாவாக இருந்தாலும் சரி, ஆப்பிரிக்காவாக இருந்தாலும் சரி, பாம்புகள் தான் கனவுலகின் ‘நம்பர் 1’ வில்லன். நம் நிஜ வாழ்க்கையில் ஒளிந்திருக்கும் ஏதோ ஒரு ஆபத்து அல்லது கவலை தான் இப்படிப் பாம்பாக உருவெடுத்து நம்மைத் துரத்துகிறதாம்.

பாம்புகள் ஒரு பக்கம் இருக்க, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குப் பற்கள் தான் பெரிய பிரச்சனையாக இருக்கிறது.

சுமார் 17 நாடுகளில் ‘பற்கள் கொட்டுவது’ போன்ற கனவுகள் தான் அதிகம் வருகிறதாம். “பல்லு போனா சொல்லு போச்சு” என்பார்கள், அதுபோலத் தன்னம்பிக்கை குறையும்போதோ அல்லது எதையாவது இழந்துவிடுவோமோ என்ற பயம் இருக்கும்போதோ தான் இத்தகைய கனவுகள் வரும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். ஐரோப்பாவில் எக்ஸ்-லவர் (Ex-lover) கனவுகள் அதிகம், சவூதி அரேபியாவிலோ திருமணம் பற்றிய கனவுகள் தான் டாப். இது தவிரப் பணம், கர்ப்பம் அல்லது யாராவது துரத்துவது போன்ற கனவுகளும் உலக அளவில் லிஸ்ட்டில் இருக்கின்றன.

கண்ணை மூடினால் போதும்… சிலருக்குப் பணம் கொட்டும், சிலருக்குப் பழைய காதலி வருவார், சிலருக்கோ பாம்பு துரத்தும். காலையில் எழுந்ததும் “ஏன் இப்படி ஒரு கனவு வந்தது?” என்று கூகுளில் தேடுவது தான் இப்போது உலக மக்களின் முக்கிய வேலையாக இருக்கிறது. அப்படி மக்கள் தேடிய தகவல்களை வைத்து ஒரு உலக வரைபடமே தயார் செய்திருக்கிறார்கள். அதைப் பார்த்தால், நமக்கெல்லாம் கனவில் கூட ‘ஒரே ரத்தம்’ தான் என்பது புரியும்.

கனவுகள் ஒன்றும் சும்மா வருவதில்லை; அது நம் ஆழ்மனதின் ஒரு ‘சேட்டை’.

நமக்கு ஒரு ஆசை இருந்தால் அது ‘இனிப்புக் கனவாக’ வரும், அதுவே பயமாக இருந்தால் நம்மை அலற வைக்கும் ‘பயங்கரக் கனவாக’ மாறும். வாழ்க்கையில் ஏதோ ஒரு சிக்கல் தீராமல் இருந்தால், அந்தப் பிரச்சனையே மீண்டும் மீண்டும் ஒரு கனவாக வந்து நம்மைப் பிடிக்கும். இப்படி மனதிற்குள் ஒளிந்திருக்கும் ரகசியங்கள் தான் கனவுகளாகத் திரையிடப்படுகின்றன.

இப்படித் தனிப்பட்ட விஷயமாக இருந்த கனவுகள், இப்போது ஒரு உலகளாவிய ஆய்வின் மூலம் வியப்பூட்டும் உண்மைகளைச் சொல்லியிருக்கின்றன.

இந்த ஆய்வின் படி, இந்தியா உட்பட சுமார் 52 நாடுகளில் மக்கள் ‘பாம்புகள்’ கனவில் வருவதைப் பற்றித்தான் விடிய விடியத் தேடுகிறார்கள். ஆசியாவாக இருந்தாலும் சரி, ஆப்பிரிக்காவாக இருந்தாலும் சரி, பாம்புகள் தான் கனவுலகின் ‘நம்பர் 1’ வில்லன். நம் நிஜ வாழ்க்கையில் ஒளிந்திருக்கும் ஏதோ ஒரு ஆபத்து அல்லது கவலை தான் இப்படிப் பாம்பாக உருவெடுத்து நம்மைத் துரத்துகிறதாம்.

பாம்புகள் ஒரு பக்கம் இருக்க, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குப் பற்கள் தான் பெரிய பிரச்சனையாக இருக்கிறது.

சுமார் 17 நாடுகளில் ‘பற்கள் கொட்டுவது’ போன்ற கனவுகள் தான் அதிகம் வருகிறதாம். “பல்லு போனா சொல்லு போச்சு” என்பார்கள், அதுபோலத் தன்னம்பிக்கை குறையும்போதோ அல்லது எதையாவது இழந்துவிடுவோமோ என்ற பயம் இருக்கும்போதோ தான் இத்தகைய கனவுகள் வரும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். ஐரோப்பாவில் எக்ஸ்-லவர் (Ex-lover) கனவுகள் அதிகம், சவூதி அரேபியாவிலோ திருமணம் பற்றிய கனவுகள் தான் டாப். இது தவிரப் பணம், கர்ப்பம் அல்லது யாராவது துரத்துவது போன்ற கனவுகளும் உலக அளவில் லிஸ்ட்டில் இருக்கின்றன.

ஆய்வு சொல்வது என்ன?

இந்தக் கனவுகள் வெறும் கற்பனையல்ல; அவை அந்தந்த நாட்டு மக்களின் சமூகச் சூழல் மற்றும் தனிப்பட்ட உணர்வுகளின் பிரதிபலிப்பாகவே பார்க்கப்படுகின்றன. பணம், உறவுகள், உடல்நலம் எனப் பல விஷயங்கள் கனவுகளாக உருவெடுக்கின்றன. குறிப்பாகப் பாம்புகள் மற்றும் பற்கள் தொடர்பான கனவுகள் உலகளாவிய அளவில் மனிதர்களிடையே பொதுவான ஒரு மனோபாவம் இருப்பதை உறுதி செய்கின்றன. ஆக, நாம் எந்த ஊரில் இருந்தாலும், எந்த மொழி பேசினாலும் நம் ஆழ்மனதின் பயங்களும் ஆசைகளும் ஒன்றுதான். இன்று இரவு உங்களுக்கு என்ன கனவு வரப்போகிறது? அது பாம்பாக இருந்தால் மட்டும் கொஞ்சம் உஷார்!

Related Posts

error: Content is protected !!