அறுபதாவது அமெரிக்க தேர்தல் கவுண்ட் டவுன்- 2

அறுபதாவது அமெரிக்க தேர்தல் கவுண்ட் டவுன்- 2

அநேக விவாதங்கள் முடிந்து ஜனாதிபதிக்கான தேர்தல் திருவிழா ஏற்கனவே கூறியபடி நவம்பர் முதல் செவ்வாய் கிழமை நடக்கும். இந்த வருடம் அது நவம்பர் 5 ஆம் தேதி அன்று நடைபெறுகிறது. நீங்கள் எந்த கட்சியில் இணைந்து இருந்தாலும் எந்த ஒரு ஜனாதிபதி வேட்பாளருக்கும் நீங்கள் வாக்கு செலுத்த முடியும். மாநில பிரைமரி தேர்தலில் பங்கு கொள்ள வில்லை என்றாலும் நீங்கள் ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தலில் வாக்கு செலுத்த தடை இல்லை. தபால் வாக்கு முன்பே செலுத்தலாம். வாக்கு செலுத்த முடியாமல் போனவர்கள் வாக்கு செலுத்த விடுபட்டவர்கள் மற்றும் எர்லி வோட்டிங் என பல வகை ஓட்டுக்கள் செலுத்தும் அளவுக்கும் ஒரு சவுகரியம் உண்டு. வேட்பாளர்களும் தேர்தல் வரைக்கும் இந்த ஐம்பது மாநிலங்களிலும் பயணித்து வாக்கு செலுத்த முடியும்.

எர்லி வோட்டிங் முறையில் இந்த தடவை 7 .5 கோடி ஓட்டுக்கள் இந்த ஆர்டிகிள் எழுதும் போது பதிவானது. அதாவது 4 நவம்பர் காலை 7 மணிக்குள் பதிவான எர்லி ஓட்டுக்கள் தான் இந்த ஏழரை கோடி ஓட்டுக்கள். தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எர்லி ஓட்டுக்கள் மூலம் ஏற்கனவே வகை செலுத்தி விட்டார் என்பது கூடுதல் தகவல். சரி நவம்பர் ஐந்தாம் தேதி தான் வாக்கு செலுத்தும் முறை முடிந்து போகுமே ஏன் தேர்தல் அறிவிப்பு மற்றும் யார் ஜனாதிபதி என்பவரை ஏன் 2025 தேதி அறிவிக்கணும் அதையும் கொஞ்சம் சொல்லுங்களேன்னு கேட்பது தெரிகிறது. அதற்கான காரணத்தை சொல்கிறேன்.

நவம்பர் ஆறாம் தேதியே கமலா ஹாரிஸ் அல்லது டொனால்ட் டிரம்ப் வெற்றி வாய்ப்பு என ஊடகங்கள் கதற ஆரம்பித்தாலும் இவர் தான் வெற்றி வேட்பாளர் ஜனாதிபதி இவர்தான் என்று நிச்சயமாக கூற முடியாது. ஏன் என்றால் இதற்கு பிறகு டிசம்பர் மாதத்தில் வரும் எலக்ட்ரால் காலேஜ் என்னும் வாக்கு நடை முறை இருக்கிறது. எலக்டரால் காலேஜ் வோட்டிங்கா? இது என்னங்க புதுசா இருக்கானு நீங்க முணு முணுப்பது என் காதில் விழுகிறது. எலக்ட்ரால் காலேஜ் வோட்டிங் தான் இவர் தான் ஜனாதிபதி இவர் துணை ஜனாதிபதி என தீர்மானிக்கும் இன்னொரு பெரும் சக்தி. இதில் முதல் பிராசஸ் “எலக்டர்ஸ்” யாரெல்லாம் என்பதை முடிவு செய்யணும். அடுத்து அந்த எலக்டர்ஸை நீங்கள் எந்த கட்சி வேட்பாளருக்கு வாக்கு செலுத்தி உள்ளீர்கள் என கேட்கப்படும். பின்பு எலக்டர்ஸ் அவர்களின் வகை அமெரிக்க காங்கிரஸ் எனப்படும். (அமெரிக்க காங்கிரஸ் என்பது ஒரு கட்சி அல்ல).

எவ்வளவு எலக்டர்ஸ் இந்த ஐம்பது மாநிலங்களில் என பார்ப்போம். 48 மாநிலங்கள் மற்றும் வாஷிங்க்டன் டிசி 3 எலக்டர்ஸ் உட்பட மொத்தம் 538 எலக்டர்ஸ் இருப்பார்கள். இந்த 538 எலக்டர்ஸ் எப்படி வந்தது என்று பார்ப்போம். ஒவ்வொரு மாநிலத்துக்கு குறிப்பிட்ட எலக்டர்ஸ் இருப்பார்கள். உதாரணத்திற்கு நியூ யார்க் மாநிலத்துக்கு 31 எலக்டர்ஸும் கலிபோர்னியா மாநிலத்துக்கு 55 எலக்டர்ஸும் இருப்பது போல அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து மொத்தம் 538 எலக்டர்ஸ் இருப்பார்கள். இவர்கள் சேர்ந்து வாக்கு முறையில் அடுத்த அமெரிக்காவின் ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி வெற்றியாளர்கள் தேர்ந்து எடுப்பார்கள். ஒவ்வொரு மாநிலத்தின் எலக்டர்ஸ் ஏற்ற இறக்கத்திற்க்கான காரணம் அந்த மாநிலம் எவ்வளவு பெரிது சிறிது என்பதல்ல விஷயம் எவ்வளவு குடிமக்கள் வசிக்கிறார்கள் என்பதே முக்கியம்.

அதான் பிடித்த வேட்பாளர்களுக்கு ஒட்டு போட்டாச்சே பின்பு எதுக்கு இந்த எலக்ட்ரால் காலேஜ் ஒட்டு எலக்டர்ஸ் ஒட்டு என நீங்கள் கேட்டால், சாதாரண குடிமக்கள் நேரடியாக அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர்களான டொனால்ட் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் அல்லது துணை ஜனாதிபதி வேட்பாளர்கள் வான்ஸ் அல்லது வால்ஸ்க்கு நீங்கள் நேரடியாக வாக்கு செலுத்த முடியாது என்பதனால் தான் இந்த லக்ட்ரால் காலேஜ் முறை……. என்னது அப்போ நான் யாருக்கு தான் வாக்கு செலுத்துவேன் என்று நீங்கள் கேட்கும் முன் நாளை வரை பொறுமையாக இருங்கள் கவுண்ட் டவுன் ஒன்றில் தெரிய வரும் …..