பெண்கள் எல்லாம் அத்தனை நேர்மையாளர்கள் அல்ல!

பெண்கள் எல்லாம் அத்தனை நேர்மையாளர்கள் அல்ல!

நான் பெண்ணியவாதிதான்.ஆனால் எனக்கு கிடைத்த பெண்கள் சார்ந்த அனுபவங்கள் மிக மோசமானது.ஆண்களுடன் பணிபுரிவது சிக்கலே இல்லை. பெண்கள் இன்னொரு ஆணை தலைவராக ஏற்றுக்கொள்வர். இன்னொரு பெண்ணை கடினம். இன்னொரு பெண் தன்னை விட எந்த விதத்திலும் கூடுதலாய் பாராட்டு வாங்குவது பிடிக்காது..முக்கியத்துவம் பெறுவது பிடிக்காது.பொய் சொல்வது, ஸ்மார்ட்டாக பேசி அடுத்தவர்களை நமக்கு வேண்டாதவர்களாய் ஆக்குவதில் பெண்கள் அளவுக்கு ஆண்கள் ஸ்மார்ட் இல்லை.

பெண்கள் எல்லாம் அத்தனை நேர்மையாளர்கள் அல்ல.சான்ஸ் கிடைத்தால் இன்னொரு பெண்ணை அழிக்க எந்தளவுக்கும் தயார் ஆவார்கள்.கூட இருந்துக்கொண்டே நம்மை பற்றிய பொய்களை உண்மை போல் பரப்ப அவர்களால் மட்டுமே முடியும்.அதுவும் அவர்கள் முன் அவர்கள் ஆண் நட்புகள் நம்மிடம் சிரித்து பேசினாலே போதும் நமக்கு ஸ்கெட்ச் தயாராகிவிடும்.

ஒரு ஆண் போனில் சொன்னார். உங்களுக்கு லைக் போட்டா கூட சிக்கல் வரும் ..ஆனா உங்கள் பதிவுகள் பிடிக்கும்னு..

என் அனுபவத்தில் எனக்கு நட்பு துரோகம் செய்தவர்களில் ஆண்கள் யாருமில்லை..ஆண்களுடனும் விலகி சென்றுள்ளேன்..பிரச்சனை எனில் நேருக்கு நேர்தான். தரக்குறைவா பேசினாலும் நேராத்தான். பின் வேலை அதிகம் இல்லை ஒரு பெண் நம்மை அழிக்கிறாள் என்பது கிளைமாக்சில்தான் உணர்வோம்.ஒரு பெண்கள் குழுவிடம் தொடர்ந்து காசிப் பேசவேக் கூடாது என தொடர்ந்து பேசி வந்தேன். அவர்கள் என்னை தவிர்த்து என்னை பற்றியே காசிப் பேசினார்கள்.

அவர்களால் இன்னொருப்பெண்ணை பாராட்ட மனம் வராது. இன்னொரு பெண் பெயர் வாங்குவது பொறுக்காது. பெண்கள் குழுவுடன் வேலை செய்பது மிக கடினமானது. தினம் ப்ரேக் கப் கத்திகள் முதுகில் பாயும் .

அப்போ நீங்க என கேள்வி வரலாம்.

இதுப்போன்ற சமயங்களில் ஆண்களுக்காக போராட போயிடலாம்னு தோணும் .

பக்‌ஷே ..நானும் ஒரு பெண்தானே 🙂

கிருத்திகாதரன்

error: Content is protected !!