அமெரிக்கா : சிலிக்கான் வேலி பேங்க் திவால்?

அமெரிக்கா : சிலிக்கான் வேலி பேங்க் திவால்?

மெரிக்காவின் கலிப்போர்னியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் சிலிக்கான் வேலி பேங்க் பங்குகள் 85 சதவீதம் சரிந்ததால், அந்நாட்டு வங்கி துறை பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது. சிலிக்கான் வேலி வங்கி (SVB) ஸ்டார்ட்அப் மற்றும் வென்சர் கேப்பிடல் நிறுவனங்களுக்கு அதிகப்படியான டெபாசிட் பெறுவதும், நிதியுதவிகளை அளிக்கும் சேவைகளை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சிலிக்கான் வேலி வங்கி அமெரிக்காவின் 16வது பெரிய வங்கியாகும். இந்த வங்கி தொழில்நுட்பத் துறையில் பெரும் பங்கைக் கொண்டிருந்தது. அமெரிக்காவில் வட்டி விகிதங்கள் அதிகரித்து வருவதால் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக உள்ளனர். இதற்கிடையில், வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை எடுக்கத் தொடங்கினர். இந்நிலையில், ​​வங்கி தனது நிலையை வலுப்படுத்த 1.75 பில்லியன் டாலர் நிதி திரட்டுவதாக அறிவித்தது. இந்த அறிவிப்புக்குப் பிறகு வங்கியின் நிதி நிலை குறித்த கேள்விகள் எழத் தொடங்கின. வங்கியின் தாய் நிறுவனமான SVB ஃபைனான்சியல் குழுமத்தின் பங்குகளும் 70% சரிந்தன.

பொருளாதார நிலையில் அமெரிக்காவிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் சிலிக்கான் வேலி வங்கி திவால் செய்தி, அமெரிக்க சந்தைகளில் பரபரப்பை ஏற்படுத்தியது. 2008 பொருளாதார நெருக்கடியின் போது வாஷிங்டன் மியூச்சுவல் மூழ்கிய பிறகு, மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட நிலையில், இது அதை போன்று மிகவும் பாதிப்பை ஏற்படுத்துவதாக கருதப்படுகிறது. ஸ்டார்ட்அப்களில் கவனம் செலுத்தும் சிலிக்கான் வேலி வங்கி திவால் என அறிவிக்கப்பட்டு, அமெரிக்காவின் ஃபெடரல் டெபாசிட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (FDIC) அதன் நிர்வாகத்தை கைப்பற்றியது

ராய்ட்டர்ஸ் அறிக்கையின்படி, சிலிக்கான் வேலி வங்கியின் அலுவலகங்கள் மார்ச் 13 அன்று திறக்கப்படும் என்று FDIC தெரிவித்தது. காப்பீடு செய்த முதலீட்டாளர்கள் காப்பீட்டுத் தொகையைப் பெறுவார்கள். ஆனால் 2022 ஆம் ஆண்டின் இறுதியில், வங்கியின் $ 175 பில்லியன் டெபாசிட்களில், 89% டெபாசிட்கள் காப்பீடு செய்யப்படவில்லை என்பது அறியப்படுகிறது. ஆதாரங்களை மேற்கோள் காட்டி, FDIC மற்றொரு வங்கியை சிலிக்கான் வேலியுடன் இணைக்க முயற்சிப்பதாகக் கூறப்பட்டது. இந்த நடவடிக்கையில் மூலம், பாதுகாப்பற்ற முதலீடுகளுக்கு பாதுகாப்பு வழங்க முடியும்.

error: Content is protected !!