ஜி ஜின்பிங் 3வது முறையாகவும் சீன அதிபராக தேர்வு!

சர்வதேச பெரியண்ணாக்களில் ஒரு நாடான சீன வரலாற்றில் முதன் முறையாக, அதிபல் ஜி ஜின்பிங் 3வது முறையாகவும் அந்நாட்டு அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். உலகின் சக்தி தலைவர் களில் ஒருவரான, 69 வயதாகும் ஜின்பிங், தொடர்ந்து மூன்றாவது முறையாக போட்டியின்றி ஒருமனதாக சீன அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.. மாவோவுக்குப் பிறகு சீன தலைவர்கள் இருமுறை மட்டுமே அதிபர் பதவியை வகித்துள்ளனர். அவருக்குப் பிறகு தற்போது ஷி ஜின்பிங் தான் மூன்றாவது முறையாக சீன அதிபர் பதவியை வகிக்கிறார்.
ஜிஜின்பிங் 2013ம் ஆண்டு சீனா அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட உடனேயே, ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக, ஏழு உயர் தலைமைப் பதவிகள் மற்றும் இரண்டு டஜன் மூத்த அதிகாரிகள் உட்பட சுமார் 1.5 மில்லியன் அரசாங்க அதிகாரிகளைத் தண்டித்தார். அவர்களில் 2 பேருக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டது. தொடர்ந்து, அவரது அரசியல் எதிரிகளை சூறையாடியவர், தனது ஆதரவாளர்களையும், கூட்டாளிகளையும் அரசாங்கத்தில் உயர் பதவிகளில் அமர்த்தி ஆட்சி செய்து வருகிறார். உலக நாடுகளுக்கு சவால் விடும் வகையில், தன்னை வலுவாக நிலைநிறுத்திக் கொண்டார், கடந்த 2018ம் ஆண்டு சீனாவின் அரசியலமைப்பை திருத்தி, சாகும் வரை தானே ஜனாதிபதியாக இருக்கும் வகையில் மசோதாவை நிறைவேற்றினார். அதன்படி, தற்போது 3வது முறையாக அதிபராகி உள்ளார்.
அவரது கட்சியின் சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸ் அமைப்பின் மூலம் அவர் மீண்டும் நாட்டின் உயர்ந்த தலைவராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.கடந்த ஆண்டு அக்டோபரில், ஜின்ங் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பதவிக் காலம் 5 ஆண்டுகள் ஆகும். இந்த நிலையில், சுமார் 3,000 உறுப்பினர்களைக் கொண்ட சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸ் அமைப்பு அவருக்கு வாக்களித்து மீண்டும் அதிபராக தேர்வு செய்துள்ளது. அதைத்தொடர்ந்து சீன நாடாளுமன்றம் புதிய நாடாளுமன்றத் தலைவராக ஜாவோ லெஜியையும், புதிய துணை அதிபராக ஹான் ஜெங்கையும் தேர்ந்தெடுத்தது. மேலும், சீனாவின் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவராகவும் ஜின்பிங் மூன்றாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதுபோல, புதிய துணை அதிபராக ஹான் ஜெங் தேர்ந்தெடுக்கப்பட்டார்.