விருதிற்காக ஹாங்காங் செல்லும் ‘பொன்னியின் செல்வன்’ படக் குழு!

விருதிற்காக ஹாங்காங் செல்லும் ‘பொன்னியின் செல்வன்’ படக் குழு!

நாளை அதாவது மார்ச் 12ஆம் தேதி ஹாங்காங்கில் ஆசிய திரைப்பட விருது விழா நடைபெற உள்ளதை அடுத்து இந்த விழாவில் பங்கேற்க ’பொன்னின் செல்வன்’ படக்குழு ஹாங்காங் செல்ல உள்ளனர். 16வது ஆசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் 6 விருதுகளுக்கு பதில் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் இந்த திரைப்படத்துக்கு எத்தனை விருதுகள் கிடைக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மணிரத்னம் இயக்கத்தில் கடந்தாண்டு செப்டம்பர் 30-ம் தேதி வெளியானது ‘பொன்னியின் செல்வன் பாகம் 1’. கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டப் பலரது நடிப்பில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றது. இதனை அடுத்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த மாத இறுதியில் வெளியாக உள்ளது. இந்நிலையில் ( நாளை ) ஹாங்காங்கில் நடைபெறவுள்ள கௌரவமிக்க 16வது ஆசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில், தமிழ் சினிமாவின் பிளாக் பஸ்டர் திரைப்படம் “பொன்னியின் செல்வன் -பாகம் 1” (PS1) – சிறந்த திரைப்படம்,

சிறந்த இசையமைப்பாளர் (ஏ.ஆர்.ரஹ்மான்),

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பாளர் (தோட்டா தரணி),

சிறந்த எடிட்டிங் (ஸ்ரீகர் பிரசாத்),

சிறந்த ஒளிப்பதிவு (ரவி வர்மன்) மற்றும்

சிறந்த ஆடை வடிவமைப்பு (ஏகா லக்கானி) , ஆகிய 6 பரிந்துரைகளைப் பெற்றுள்ளது.

இந்த விழாவில் பங்கேற்று சிறப்பிக்க லைக்கா புரொடக்‌ஷன்ஸின் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் சார்பாக லைக்கா ,. ஜி்.கே.எம்.தமிழ் குமரன் மற்றும் , மெட்ராஸ் டாக்கீஸ் இயக்குநர் மணிரத்னம்  சார்பாக நிர்வாக தயாரிப்பாளர் சிவா ஆனந்த் ஆகியோருடன் . ஸ்ரீகர் பிரசாத் மற்றும் . ரவி வர்மன் ஹாங்காங் பயணம் மேற்கொள்கின்றனர்.

error: Content is protected !!