32°C
விளம்பரம்
Advertisement

விவாகரத்து வழக்கு பெண்டிங்கில் இருக்கும் போதே இன்னொரு மேரேஜ் பண்ணிக்கலாம்! – சுப்ரீம் கோர்ட்

admin சேலம் Published: August 26, 2018 2 நிமிட வாசிப்பு Updated: August 27, 2018 Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




2017-ம் ஆண்டின் கணக்குப்படி, சர்வதேச அளவில் விவாகரத்து வழக்குகளில் முன்னிலையில் இருப்பது ஐரோப்பா (சில நாடுகள்), அதற்கடுத்த இடத்தில் அமெரிக்கா, அதற்கடுத்து இங்கிலாந்து. இந்த நாடுகளோடு ஒப்பிடும்போது, சதவிகிதம் கணக்கில் இந்தியா மிக மிகப் பின்னால் இருக்கிறது. ஆனாலும், அதிகரித்துவரும் மணமுறிவு வழக்குகள் கொஞ்சம் அச்சப்படுத்தவும் செய்கின்றன. இந்நிலையில் விவாகரத்து குறித்த வழக்கு நீதிமன்ற நிலுவையில் உள்ள போது ஒருவர் இரண்டாம் திருமணம் செய்துக் கொள்ளலாம் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

டெல்லியில் ஒரு பெண் தனது கணவரிடம் விவாகரத்துகோரிய வழக்கில் வெற்றி பெற்றுள்ளார். அதை எதிர்து அவர் கணவர் மேல் முறையீடு செய்த வழக்கு நிலுவையில் இருந்தது. அப்போது கணவரும் மனைவியும் கலந்து பேசி விவாகரத்தை ஏற்க முடிவு செய்தனர். அவர்கள் ஏற்ற மனுவை நீதிமன்றம் ஏற்று கணவரின் மேல் முறையீட்டு மனுவை ரத்து செய்தது.

இந்த உத்தரவு ரத்து செய்வதற்கு இரு வாரம் முன்பே அந்த கணவர் இரண்டாம் திருமணம் செய்துக் கொண்டார். இந்த விவாகரத்து குறித்து இரண்டாம் மனைவிக்கும் கணவருக்கும் தகராறு ஏற் பட்டது. அதனால் அவர் விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்கும் போது தனது திருமணம் செல்லுமா என வழக்கு தொடர்ந்தார். வழக்கை குடும்ப நல நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அதை எதிர்த்து அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் அளித்த வழக்கிலும் திருமணம் செல்லாது என தீர்ப்பு வந்தது. அதையும் எதிர்த்து இரண்டாம் மனைவி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல் முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்ற அமர்வு, விவாகரத்து குறித்த வழக்கு நிலுவையில் இருந்த போது செய்துக் கொண்ட இரண்டாம் திருமணம் செல்லும் என தீர்ப்பு அளித்துள்ளது.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்