ஜீரோ பேலன்ஸூக்கு வந்த எஸ் பி ஐ!
சில ஆண்டுகளுக்கு முன் மினிமம் பேலன்ஸ் இல்லை என்றால் ஏகப்பட்ட ஃபைன் எல்லாம் போட்டு பலரின் வையிற்று எரிச்சலை சம்பாதிச்ச பேங்க்- ஆன எஸ்.பி.ஐ. வங்கியில் இப்போது கணக்கு வைத்திருப்பவர்கள் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முன்னதாக, பாரத ஸ்டேட் வங்கியில் வங்கிக்கணக்கு வைத்திருப்பவர்கள் ஊரகப்பகுதி எனில் ரூ.1,000 மற்றும் நகர்ப்பகுதிகளில் ரூ.2,000, பெரு நகரங்களில் ரூ.3,000 இருப்புத்தொகை வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக இருந்தது.
இந்த நிலையில், எஸ்.பி.ஐ. வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் குறைந்தபட்ச இருப்புத்தொகை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் வாடிக்கையாளர்கள் பூஜ்யம் இருப்புத்தொகை யுடன் உபயோகிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்.பி.ஐ தலைவர் ரஜ்னீஷ் குமார் இத்தகவலை வெளியிட்டுள்ளார். 44.51 கோடி வாடிக்கையாளர் கள் இந்த அறிவிப்பின் மூலமாக பயன்பெறுவார்கள் என்றும் கூறினார்.
இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.