இறுதிக்கட்டத்தில் ‘ரூட்’-மிரட்டலான சயின்ஸ் பிக்சன் த்ரில்லர்!
சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “ROOT – Running Out of Time” திரைப்படம், தற்போது ரிலீஸுக்கான அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பை முழுமையாக முடித்த படக்குழு, இப்போது போஸ்ட் புரொடக்ஷன் (Post-Production) பணிகளில் படுவேகமாக இறங்கியுள்ளது.
தரமான மேக்கிங் – தயாரிப்பாளர் முஜீப் உற்சாகம்!
ஒரு சயின்ஸ் பிக்சன் க்ரைம் த்ரில்லர் படத்திற்குத் தேவையான எடிட்டிங், பின்னணி இசை, கிராபிக்ஸ் (VFX) மற்றும் ஒலிக் கலவை என அனைத்துப் பணிகளும் ஒரே நேரத்தில் மும்முரமாக நடந்து வருகின்றன. படத்தின் தற்போதைய அவுட்புட் குறித்துத் தயாரிப்பாளர் ஷேக் முஜீப் மிகுந்த நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்கிறார்.

இது குறித்து அவர், “திரையில் படம் உருவாகி வரும் விதம் எங்களுக்கு மிகுந்த திருப்தியை அளிக்கிறது. எடிட்டிங் முதல் இசை வரை ஒவ்வொரு துறையினரும் எங்களின் எதிர்பார்ப்பிற்கும் மேலாக உழைத்துள்ளனர். தொழில்நுட்ப ரீதியாக சவாலான இந்தப் படத்தை, நாங்கள் திட்டமிட்ட தரத்துடன் கொண்டு வருவதில் படக்குழுவின் அர்ப்பணிப்பு முக்கியமானது. நிச்சயம் ரசிகர்களுக்கு இது ஒரு புதிய அனுபவத்தைத் தரும்” எனத் தெரிவித்துள்ளார்.
நட்சத்திர பட்டாளம்
சூரியபிரதாப் எஸ். (’நாளைய இயக்குநர் – சீசன் 1’ மூலம் கவனத்தை ஈர்த்தவர், மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கோச்சடையான்’ படத்தில் அசோசியேட் டைரக்டராக பணியாற்றியவர்)எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தில், கௌதம் ராம் கார்த்திக் நாயகனாக நடித்துள்ளார். குறிப்பாக பாலிவுட் நடிகர் அபார்சக்தி குரானா இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இவர்களுடன் பவ்யா த்ரிகா, ஒய்.ஜி. மகேந்திரன், பவனி ரெட்டி, லிங்கா, ஆர்.ஜே. ஆனந்தி என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே இதில் இணைந்துள்ளனர்.
தொழில்நுட்பக் கலைஞர்களின் கூட்டணி
‘வெரஸ் புரொடக்ஷன்ஸ்’ (Verus Productions) சார்பில் ஷேக் முஜீப், சஞ்சய் சங்கர், ராஜராஜன் ஞானசம்பந்தம் மற்றும் தனுஷ்டன் பெர்னாண்டோ ஆகியோர் இணைந்து பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு அர்ஜுன் ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். அருண் ராய் இசையமைக்க, ஜான் ஆபிரகாம் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார்.
ஒவ்வொரு நொடியும் பரபரப்பிற்குப் பஞ்சம் இல்லாத ஒரு ஹை-கான்செப்ட் த்ரில்லராக ‘ரூட்’ உருவாகி வருகிறது. விரைவில் இதன் டீசர் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


