ரெட்ட தல – விமர்சனம்!
டைரக்டர் கிருஷ் திருக் குமரன் , புத்தரின் போதனைகளில் ஒன்றை ஆக்சன் கலந்த காதல் கதையை கவுதம் மேனன் பாணியில் தர மெனகெட்டிருக்கிறார் .அதற்காக துண்டு துண்டாய் சொல்லும் கதையின் காட்சிகள் கனெக்ட் ஆகவில்லை . அதிலும் முதல் பாதி படம் வேகமாகவும், திருப்பங்களுடனும் பயணிப்பது போல் இரண்டாம் பாதி இல்லாதது சற்று பலவீனம். குறிப்பாக கேரக்டர் வடிமைப்பில் பெரும் பிழைகளுடன் உருவாகி இருக்கும் இந்த ரெட்ட தல படம் சண்டைக் காட்சி பிரியர்களுக்குககான ஃபுல் மீல்ஸ்தான்.
கதை என்னவென்றால் பாண்டிச்சேரியை மையமாக வைத்து உருவாகி உள்ளது. சிறிய வயதிலேயே பெற்றோரை இழந்த காளி என்ற அருண் விஜய், அந்த சிறு வயது தோழியாக சித்தி இத்னானியுடன் நட்பாக பழகி வந்திருக்கிறார். அவர்கள் இருவரும் அடல்ட்ரி வயதுக்கு வந்த பின்பு சித்தி இத்னானி கிடைக்கின்ற வேலைகளை செய்து வந்தவர் ஒரு ஹோட்டலில் வெயிட்டராக வேலை பார்த்து வருகிறார். இன்னொரு பக்கம் காளி என்ற அருண் விஜய் சித்தி இத்னானி தன்னை காதலித்து வருகிறார் என்று நினைத்து சித்தி இத்னானியை திருமணம் செய்யும் ஐடியாவில் இருக்கிறார். ஆனால் சித்தி இத்னானியோ காளி அன்றாட காட்சி போல் இருப்பதால் “உன்னை திருமணம் செய்து கொண்டு நானும் கஷ்டப்பட விரும்பவில்லை. அதனால் மிகப் பெரிய பணக்காரன் ஒருவனை திருமணம் செய்யப் போகிறேன்” என்று வெளிப்படையாக சொல்லி காளியை நோகடிக்கிறார்.தன்னுடைய காதல் பிசுபிசுத்துப் போன சோகத்தில் இருந்த அருண் விஜயை தற்செயலாக இன்னொரு அருண் விஜய்யான உபேந்திராவை சந்திக்கிறார். இருவருமே ஒரே மாதிரி இருப்பதால் இருவருக்கும் ஒரு குழப்பம் வருகிறது. இது எப்படி சாத்தியம் என்பதைவிட, “சந்தித்து விட்டோம் இனிமேல் நாம் எப்படி இருப்போம் என்பதை நாம் யோசிப்போம்” என்று அட்வைஸை வீசுகிறார் பணக்காரரான உபேந்திரா. ஒரு சூழலில் காளி என்ற அருண் விஜய் உபேந்திரா என்ற அந்த பணக்கார அருணை சித்தி இத்னானியுடன் அறிமுகப்படுத்தி வைக்கிறார். அச்சயம் சித்தியின் கிரிமினல் மூளை வேலை செய்து “உபேந்திராவை கொலை செய்து விட்டால் அவரிடம் இருக்கும் மொத்த பணமும் நமக்கு வந்துவிடும். நாம் பணக்காரர் ஆகிவிடலாம்* என்று காளிக்கு அட்வைஸ் செய்கிறார். இந்த திட்டத்திற்கு காதல் மயக்கத்தில் இருக்கும் காளியும் ஒத்துக் கொண்டு உபேந்திராவை திட்டமிட்டு கொலை செய்கிறார் காளி. உடனே உபேந்திரா போலவே தன்னுடைய சிகை அலங்காரத்தை மாற்றிக் கொண்டு தானே உபேந்திரா என்கிறார். ஆனால், அதற்கு பின்புதான் காளிக்கு பல உபத்திரவங்கள் ஏற்படுகின்றன. அந்த சர்ச்சையான, சஸ்பென்ஸான விஷயங்கள் என்ன? உண்மையில் உபேந்திரா யார்? அவர் எதற்கு பாண்டிச்சேரிக்கு வந்தார்? இந்தப் பிரச்சனையில் இருந்து காளி தப்பித்தாரா? இல்லையா? என்பதுதான் இந்தப் படக்கதை.
டபுள் ஹீரோவாக நடித்திருக்கும் அருண் விஜய், உடை மற்றும் தோற்றத்தில் மட்டும் இன்றி நடிப்பிலும் வேறுபாட்டை வெளிப்படுத்த முயன்றிருக்கிறார். ஆனால் ஆக்ஷன் காட்சிகளில் அதிகமாக மெனக்கெட்டிருக்கும் அருண் விஜய் நடிப்பில் அரைச்ச மாவை வழங்கும் அதே மிக்ஸி முகம். அடிசினலாக ஓவராக்கிட்டிங்கும் தலைக் காட்டுகிறது . அதேசமயம் ஆக்சன் காட்சிகளை பின்னி பெடல் எடுத்து ச் இருப்பவரை ரசிக்க விடாமல் கேமராமேனும், மியூசிக் டைரக்டரும் கூட்டு சதி செய்து விட்டார்கள்.
ஹீரோயின் சித்தி இத்னானி கொழுக் மொழுக் என்று – அதிலும் பணத்தாசை பேயாக – கதையின் மையப்புள்ளியாக நடித்திருந்தாலும், திரையோட்டத்தில் யாதொரு பாதிப்பையும் ஏற்படுத்தாமல் வந்து, போகிறார்.
வில்லனாக ஹரிஷ் பெராடியும், அவர் மகன் பாலாஜி முருகதாஸ் மற்றும் மருமகள் தனியா ரவிச்சந்திரன் என்று ஆளாளுக்கு ஒவ்வொரு காட்சியிலும் வந்து தங்களது வில்லத்தனத்தை காட்டி விட்டுப் போய் இருக்கிறார்கள்.
இன்னொரு பக்கம் படத்திற்கு படம் ஊமை சேட்டைகளையும் உடல் அசைவுகளால், டபுள் மீனிங் வசனம் பேசி வரும் ஜான்விஜய் கொஞ்சமும் ஒட்டவில்லை
கேமராமேன் டிஜோ டாமியின் ஓளிப்பதிவு –ரெட்டத் தலவை பெரும் பலவீனமாக்கி விட்டது. வித்தியாசமான கோணங்கள் மற்றும் வண்ணங்கள் மூலம் படம் முழுவதையும் முழுக்க இருள் சூழ உலகமாக்கி ரசிகனை செல்போன் பக்கம் திருப்பி விட்ட்டு விடுகிறார்
மியூசிக் டைரக்டர் சாம்.சி.எஸ் இசையில், தனுஷ் குரலில் “கண்ணம்மா..” பாடல் திரும்ப திரும்ப கேட்கும் ரகம். பின்னணி இசை கொஞ்சம் டெல்லி வானிலை அளவில் எல்லை மீறி ஒலித்து மனம் மற்றும் காதுகளை ரணமாக்குகிறது ‘
லேட்டஸ்ட் டெக்னாலஜியான ஏஐ மற்றும் ‘ஆசை ‘ என்ற ஆளை முழுங்கும் சரியான ஃபிளாட்பாரத்தைத் தேர்ந்தெடுத்த டைரக்டர் கிரிஷ் திருக்குமரன் சினிமாவுக்கான ஜீவம் திரைக் கதை என்னும் நரம்பியலில் போதிய கவனம் செலுத்தாததால் ரெட்ட தல இருந்தும் ஆடவில்லை
மார்க் 2.75/5,


