பிரபலமான காமிக்ஸ் கேரக்டர்களை உருவாக்கிய ஸ்டேன் லீ காலமானார்.

பிரபலமான காமிக்ஸ் கேரக்டர்களை உருவாக்கிய ஸ்டேன் லீ காலமானார்.

உலகிலுள்ள சகல தரப்பினரையும் கவர்ந்த  பிரபலமான ஸ்பைடர் மேன், அவெஞ்சர்ஸ், கேப்டன் அமெரிக்கா, ஹல்க், தோர், பென்டாஸ்டிக் ஃபோர், எக்ஸ் மேன் உள்ளிட்ட மார்வெல்லின் பல காமிக்ஸ் கதாபாத்திரங்களையும், சூப்பர் மேன், அக்குவா மேன், பேட்மேன், சான்ட்மேன், வொன்டர் வுமன் உள்ளிட்ட டிசி காமிக்ஸ்ஸின் பல்வேறு கதாபாத்திரங்களையும்  உருவாக்கிய ஸ்டேன் லீ முதுமையின் காரணமாக நேற்று (நவம்பர் 13) அமெரிக்காவில் உயிரிழந்தார். அவருக்கு வயது 95.

அது சரி யார் இந்த லீ? என்று கேட்போகளுக்கான பதிலிது:

ரோமானிய யூத குடியேறி தம்பதிக்கு 1922ஆம் ஆண்டு பிறந்தார் லீ. ஒரு மாத இதழில்  காமிக்ஸ் பிரிவில் பணியாற்றினார் லீ, பின் அந்த இதழ்தான் மார்வல் காமிக்ஸ் நிறுவனமாக உருவெடுத்தது. தனது 18ஆவது வயதில் அந்நிறுவனத்தின் ஆசிரியரானார் லீ. ஆரம்பத்தில் குற்றக் கதைகள், போர் கதைகள் மற்றும் மேற்கத்திய வாசகர்களை குறிவைத்து சாதாரண காமிக்ஸ் கதைகளை எழுதினார் லீ.

ஆனால் ஏதேதோ காரணங்களால் தனது 40ஆவது வயதில் காமிக்ஸ் துறையிலிருந்தே வெளியேற முடிவெடுத்தார் லீ.மனைவி ஜோனின் கட்டாயத்தின் பெயரிலேயே காமிக்ஸ் துறையில் தொடர்ந்து இயங்கினார். 1961ஆம் ஆண்டு, லீ மற்றும் வரை கலைஞர் ஜேக் உருவாக்கிய ஃபண்டாஸ்டிக் ஃபோர் கதாபாத்திரங்கள்தான் அவருக்கு பெரும் புகழை ஈட்டி தந்தது. இதனை தவிர்த்து, எக்ஸ் மேன், ஐயன் மேன் ஆகியவையும் இவர் உருவாக்கிய கதாபாத்திரங்கள்தான்.

மார்வல் காமிக்ஸ் செல்வாக்காக இருந்த காலக்கட்டத்தில் ஆண்டுக்கு ஏறத்தாழ 50 மில்லியன் பிரதிகள் விற்பனை ஆனது. 1971 ஆம் ஆண்டு அவர் ஓய்வு பெறும் வரை, மார்வல் காமிக்ஸ் இதழில் முக்கிய பங்கு வகித்து, அனைத்து கவர் ஸ்டோரிகளையும் எழுதினார்.

2009 ஆம் ஆண்டு மார்வல் காமிக்ஸை 4 பில்லியன் டாலர்களுக்கு வாங்கிய வால்ட் டிஸ்னியின் தலைவர் பாப், லீயை கதாநாயகன் என வர்ணிக்கிறார். மேலும் “அவரது கற்பனை திறனானது அவரது இதயத்தின் அளவை விட பெரியது” என்கிறார் பாப். அவரது வாசகர்கள், திரை கலைஞர்கள் என பலர் உலகெங்கும் ஸ்டான் லீக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Related Posts

error: Content is protected !!