மாஸ்டர் கார்டுகளுக்கு தடை : ரிசர்வ் பேங்க் அறிவிப்பு!
நம் நாட்டில் , ‘மாஸ்டர்கார்டு’ நிறுவனம், புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க, வரும், 22ம் தேதியிலிருந்து ரிசர்வ் வங்கி.தடை விதித்துள்ளது. ஏற்கனவே, ‘அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் பேங்கிங் கார்ப்பரேஷன்’ மற்றும், ‘டைனர்ஸ் கிளப் இண்டர்நேஷனல் லிமிடெட்’ ஆகிய இரு நிறுவனங்களுக்கும், இதே காரணத்தினால், மே மாதம் முதல் தேதியிலிருந்து, புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க தடை விதிக்கப்பட்டது. இப்போது இந்த வரிசையில் மூன்றாவதாக, மாஸ்டர் கார்டு நிறுவனமும் இணைந்து உள்ளது.
உலகெங்கிலும் உள்ள கார்டுகள் சந்தையில் கணிசமான பங்கை மாஸ்டர்கார்டு மற்றும் விசா போன்ற உலகளாவிய நிறுவனங்கள் கொண்டிருக்கும்போது, RuPay இந்திய தயாரிப்பாக சேவையை வழங்கி வருகின்றன.2020 நவம்பர் 30 ஆம் தேதி நிலவரப்படி வழங்கப்பட்ட மொத்த அட்டைகளில் கிட்டத்தட்ட 60 சதவீத சந்தை பங்கை இந்த நிறுவனத்தைக் கொண்டுள்ளது. கிரெடிட் கார்டு முன்னணியில், விசா மற்றும் மாஸ்டர்கார்டு அதிக சந்தைப் பங்கைக் கொண்டுள்ளன. எனினும், இந்தியாவில் மக்கள் பலரும் தற்போது யுபிஐ பயன்படுத்துவதோடு, பிஎன்பிஎல் (Buy Now, Pay Later) பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இச்சூழலில் ‘மாஸ்டர்கார்டு ஆசியா பசிபிக்’ நிறுவனம், தரவு சேமிப்பு குறித்த விதிகளை பின்பற்றாத காரணத்தினால், இந்நிறுவனம் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, பிரிபெய்டு கார்டு ஆகியவற்றில் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க, ரிசர்வ் வங்கி. தடை உத்தரவு வெளியிட்டுள்ளது. அதாவது ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின்படி, இந்திய வாடிக்கையாளர்களின் தகவல்கள் குறித்த விவரங்களில் சேகரிக்கப்படும் சர்வர்கள் இந்தியாவில் இருக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.
ஆனால், இந்த உத்தரவை மாஸ்டர் கார்டு நிறுவனம் பின்பற்றவில்லை. போதுமான கால அவகாசமும், வாய்ப்புகளும் கொடுத்த போதும், மாஸ்டர்கார்டு நிறுவனம், தரவு சேமிப்பு குறித்த டேட்டாவை இந்தியாவில் சேமிக்க முன்வரவில்லை. என, ரிசர்வ் வங்கி தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்கள், இந்த தடையால் பாதிக்கப்பட மாட்டார்கள் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.