ரஜினி இன்னும் ஒரே வாரத்தில் அரசியல் களத்தில் இறங்க வாய்ப்பு?

ரஜினி இன்னும் ஒரே வாரத்தில் அரசியல் களத்தில் இறங்க வாய்ப்பு?

ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என்பது நம்முடைய கணிப்பு. இன்னும் நடிக்க வேண்டிய படங் களை முடித்துவிட்டு, கட்டாய ஓய்வு அவசியம் என ஒரு மருத்துவ நிபுணரை வைத்து சொல்ல விட்டு, அமைதியாக போய் விடுவார். ஆனால் பாஜக தமிழகத்தில் நடக்க ரோடு போடும் வேலையை அவர் செய்யாமல் இல்லை… சாமான்ய இந்து மத நம்பிக்கையாளர்களை உசுப்பி தங்கள் பக்கம் வரச்செய்வதில் ரஜினியை இயக்குபவர்களின் சாமர்த்தியம் நன்றாக தெரிகிறது..

அரசியலுக்கு வரவிரும்பாத ரஜினியை அரசியலுக்கு எப்படியும் கொண்டுவந்து தீருவது என திமுக தலைமை கங்கணம் கட்டிக்கொண்டு வேலைபார்க் கிறது.. இதே வேகத்தில் அவர்கள் போனால் ஒரே மாதத்தில் ரஜினிக்கு அரசியல் களம் வாய்த்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை..

இந்து தெய்வங்களை அன்று நிர்வாணமாக சித்தரித் தது மாதிரி இன்றைக்கு உங்களால் சித்தரித்து பேரணி நடத்தமுடியுமா என்று கேட்டும் அடுத்து வம்புக்கு இழுக்கலாம்.. சீதையை ஆடையின்றி சித்திரம் வரையப்பட்ட சம்பவத்தை ரஜனி தப்பு என சொல்லு வதில் என்ன தவறு என சாமான்யனே கேக்கலாம்..

இவர்களிடம் வசமாக சிக்கியுள்ளது திமுகதான்.. திக. உள்ளிட்ட கட்சிகள் சமயம் கிடைக்கும் போதெல்லாம் திமுகவை தர்மசங்கடத்தில்தான் நிறுத்துகிறார்கள்.

திருப்பதி பெருமாள் உண்டிக்கு பூட்டு எதற்கு, பாதுகாப்பு எதற்கு என்று கேட்ட கனிமொழிகூட இது போன்ற விஷயங்களில் திமுகவுக்கு அனுகூல சத்ருதான்..

திமுக ஒன்றும் இந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல என்றும் திமுகவில் இருப்பவர்கள் 90 சதவீதம் இந்துக் கள்தான் என்றும் ஸ்டாலின் அடிக்கடி சொல்லும் அளவுக்கு காமடியான நிலைமை. கொஞ்சம் பின்னோக்கி பார்ப்போம்.

தேர்தல் அரசியல்தேவை இல்லாத பெரியார், இறை மறுப்பில் லாப நஷ்டம் பாராமல் தீவிரம் காட்டினார்

மக்களை சந்தித்தே ஆகவேண்டிய தேர்தல் அரசியல் தேவைப்பட்ட அண்ணா அவர்கள், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என டிராக்கையே மாற்றினார்.

மக்கள் திலகம் எம்ஜிஆர், மூகாம்பியை என் தாய் வடிவில் பார்க்கிறேன் என சொல்லி ஓப்பனாக பக்தியை கடைவிரித்தார்.

ஜெயலலிதா அவர்கள், தான் வைணவ பெண் என்று பகிரங்கமா சொல்லி, எவ்வளவு வழிபாடுகள், யாகங்கள் செய்யமுடியுமோ அத்தனையையும் செய்தார்.

ஆனால்இந்த விஷயத்தில் ரெண்டும் கெட்டான் நிலைமையில் அவதிப்படுவது கலைஞர் ப்ளஸ் ஸ்டாலின் தலைமையிலான திமுக மட்டுமே..

ஒரு பக்கம் மற்ற மதத்தினருடன் சேர்ந்துகொண்டு இந்த மத நம்பிக்கைகளை கேலி செய்வார்கள். ஆனால் அவர்கள் வீட்டில் மட்டும் சாஸ்திர சம்பிரதாயப்படி எல்லா சடங்குகளும் நடக்கும், திமுகவினரும் சாமி கும்பிடுவார்கள்.

இந்த டபுள் ஆக்டிங் பாயிண்டை பிடித்துதான் திமுக வுக்கு எதிராக சாமான்ய பக்தகோடி மக்களை திருப்ப பார்க்கிறார்கள் ரஜினியை இயக்குபவர்கள்

திமுக, திகவுக்கு முட்டுக்கொடுத்து கடைசிவரை போகுமா என்பதை இனி பொறுத்துதான் பார்க்க வேண்டும். காலத்திற்கேற்ப சிந்தாந்தங்களை மாற்றாவிட்டால் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் கஷ்டம்தான்..

அப்புறம் அதிமுக நிலைமை.? இறை நம்பிக்கை அண்ட் கோவான அவர்களுக்கு பிரச்சினையே இல்லை. அவர்கள் தெளிவானவர்கள்.. கழட்டி விட்டால்தான் கரையேற முடியும் என்று முடிவு கட்டிவிட்டால், யாரையும், எதையும் கழட்டி விட்டு விட்டு அசால்ட்டாக போய்க்கொண்டே இருப்பார்கள்.

🖊ஏழுமலை வெங்கடேசன்
மூத்த பத்திரிகையாளர்

error: Content is protected !!