ஆயிரம் ரூபாய்தான் பென்ஷனா? – பாராளுமன்ற நிலைக்குழு புதிய பரிந்துரை

ஆயிரம் ரூபாய்தான் பென்ஷனா? – பாராளுமன்ற நிலைக்குழு புதிய பரிந்துரை

ருங்கால வைப்பு நிதி அமைப்பில் இணைந்துள்ள ஊழியர்களில், கடந்த 2020 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை 71,01,929 பேரின் பிஎஃப் கணக்குகள் மூடப்பட்டன. அதே 2019ம் ஆண்டில் 66,66,563 பேரின் கணக்குகள் மூடப்பட்டன என்று செய்தியின் தாக்கத்தை உணர்வதற்குள் தொழிலாளர் களுக்கு வழங்கப்படும் பிராவிடெண்ட் ஃபண்ட் (பி.எஃப்) பென்ஷன் குறைந்தபட்ச தொகை 1,000 ரூபாயாக உள்ளது. அதனை ரூ.3,000 ஆக உயர்த்த வேண்டும் என்று பாராளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இன்று வரை தொடரும் கொரோனாவால் 2020 ஏப்ரல் – டிசம்பர் காலகட்டத்தில் வேலையிழந்த 71 லட்சம் ேபரின் ‘பிஎஃப்’ கணக்கு மூடப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதே சமயம்
நமது நாட்டில் பலர் மிகக் குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்கிறார்கள். பலரின் அடிப்படை ஊதியம் 10,000க்கும் குறைவாக இருக்கிறது. அதிக காலம் ஒரு நிறுவனத்தில் வேலை செய்வதும் அனைவராலும் முடியாத காரியமாக இருக்கிறது. சில சிறிய நிறுவனங்கள் முறையாக வைப்பு நிதி செலுத்துவதும் இல்லை. ஓய்வூதியத் திட்டத்தின்படி குறைந்தபட்ச பென்ஷன் தொகையாக 1,000 ரூபாய் என்ற அளவில் இருக்கிறது.

தற்போதுள்ள விலைவாசியில் ஆயிரம் ரூபாய் பென்ஷன் தொகையாக வழங்குவது ஒருவருக்கு எந்தப் பயனும் அளிக்காது. அதனால்தான் பாராளுமன்ற நிலைக்குழு குறைந்தபட்ச பென்ஷன் தொகையை 3,000 ரூபாய் என்ற அளவிற்கு உயர்த்தி தரவேண்டும் என்று தமது பரிந்துரையை சமர்ப்பித்துள்ளது.

பிஜு ஜனதா தள பாராளுமன்ற உறுப்பினர் பார்த்துஹரி மஹதாப் தலைமையில் அமைக்கப்பட்ட பாராளுமன்ற நிலைக்குழு கீழ்கண்ட பரிந்துரைகளை வழங்கியுள்ளது:

அதன்படி 1) பல தொழிலாளர்கள் சரியாக நீண்ட காலத்திற்கு இந்தத் திட்டத்தில் சேமிக்காததால் 1000 ரூபாய்க்கும் குறைவான பென்ஷன் தொகை பெற்று வருகின்றனர். மேலும் பலருக்கு இந்தத் திட்டத்தில் பணம் சேமித்து இருந்தாலும் எந்த பென்ஷன் பணமும் கொடுக்கப்படுவதில்லை. பென்ஷன் தொகை வழங்கப்பட்டாலும் மிக குறைந்த அளவில் பலருக்கு 560 ரூபாய் மட்டுமே பென்ஷன் தொகையாக கொடுக்கப்படுகிறது .

2) நீண்ட காலத்திற்கு இந்தத் திட்டத்தில் சேமிக்காத தொழிலாளர்களின் குறைகளை விரைந்து களைந்து அவர்களுக்கு அதிக பென்ஷன் தொகை கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும்

3) குறைந்தபட்ச பென்ஷன் தொகையை 1,000 ரூபாய் என்கின்ற அளவில் இருந்து குறைந்த பட்சம் 3,000 ரூபாய் முதல் 9,000 ரூபாய் வரை உயர்த்தி தர வேண்டும்.

4) மேலும் இந்தத் திட்டத்தில் சேமிக்கும் பல தொழிலாளர்கள் இடையிலே பணத்தை பெற்று விடுகின்றனர். இந்தத் திட்டத்திலிருந்து விலகுவதற்கும் எவ்வளவு தொகை திரும்ப பெறலாம் போன்ற கட்டுப்பாடுகள் சரிவர இல்லாமல் இருக்கிறது.

5) குறைந்தபட்ச பென்ஷன் தொகையை 1,000 ரூபாயில் இருந்து 3,000 ரூபாயாக உயர்த்தப்பட்டால் அரசுக்கு கூடுதலாக சுமார் 15,000 கோடி ரூபாய் செலவாகும்.

6) இந்தத் திட்டத்தில் உள்ள குறைகளை விரைவாக களைந்து தொழிலாளர்களுக்கும் பயனளிக்கும் வகையில் இந்த மாறுதல்களை செய்ய வேண்டும்

error: Content is protected !!