டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு: ரஃபேல் நடால் அறிவிப்பு!
டென்னிஸ் ஆட்ட ஜாம்பவானான ரஃபேல் நடால் தனது ஓய்வு முடிவை அறிவித்து விட்டார். கடந்த சில நாட்களாக அவர் ஓய்வு பெற உள்ளதாக தகவல் பரவி வந்த நிலையில் தனது ஓய்வு முடிவை ரஃபேல் நடால் அறிவித்துள்ளார்.அடுத்த மாதம் ஸ்பெயினில் நடைபெறும் , டேவிஸ் டென்னிஸ் தொடர் போட்டியானது , இவர் விளையாடும் கடைசி போட்டியாகும். இதையடுத்து , முற்றிலுமாக டென்னிஸ் போட்டியில் இருந்து விலகி இருக்கப் போகிறாராம். ஏறத்தாழ 20 ஆண்டுகள் சர்வதேச டென்னிசில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ள ரஃபேல் நடால் 14 முறை பிரஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் பட்டத்தை வென்று வரலாறு படைத்துள்ளார்.அத்துடன், 63 டென்னிஸ் தொடர்களில் சாம்பியன் உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை நடால் படைத்துள்ளார். அடுத்த மாதம் ஸ்பெயினின் மலாகாவில் நடைபெற உள்ள டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடருடன் சர்வதேச டென்னிசில் இருந்து நடால் ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார்.
ரஃபேல் நடால் – ஸ்பெயின் நாட்டின் டென்னிஸ் வீரரான இவர் தனது நான்கு வயதிலிருந்தே டென்னிஸ் விளையாடத் தொடங்கியவர். ‘Association of Tennis Professionals’ என்ற சங்கத்தின் உலக டென்னிஸ் வீரர்களின் தரவரிசை பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பெற்றிருப்பவர். இவர் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 22 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். இதுவரை 90 பட்டங்களை வென்றிருக்கும் நடால், ஒற்றையர் பிரிவில் களிமண் ஆடுகளங்களில் மட்டும் 62 பட்டங்களை வென்றுள்ளார், அவர் பெற்ற 13 பிரெஞ்சு ஓப்பன் பட்டங்களும் இதில் அடங்கும். கிலே எனப்படும் களிமண் ஆடுகளங்களில் தொடர்ச்சியாக அவர் பெற்ற 81 வெற்றிகளே, ஒரே பரப்பில் ஒரு வீரர் தொடர்ச்சியாகப் பெற்ற வெற்றிகளாக இருக்கிறது.
கடந்த சில வாரங்களாக ரஃபேல் நடால் ஓய்வு குறித்த செய்திகள் அடுத்தடுத்து வெளியான வண்ணம் இருந்த நிலையில், இன்று ரபேல் நடால் அதிகாரப்பூர்வமாக தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார் இன்று இது குறித்து அவர் ஒரு உணர்ச்சிபூர்வமான வீடியோவை வெளியிட்டார், அதில் அவர் தனது வாழ்க்கை முழுவதும் அவர் அனுபவித்த அனைத்து வெற்றிகள் மற்றும் கஷ்டங்களுக்கு தெரிவித்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். ஓய்வு பெறுவது தொடர்பாக, அவர் தெரிவித்துள்ள பதிவில் “அனைவருக்கும் வணக்கம், நான் தொழில்முறை டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என்பதை உங்களுக்குத் தெரிவிக்க வந்துள்ளேன். உண்மை என்னவென்றால், சில கடினமான ஆண்டுகள் அமைந்தன, குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகள் சொல்லலாம். இந்த சூழ்நிலையில், கட்டுப்பாடுகள் இல்லாமல் என்னால் விளையாட முடியவில்லை. இது ஒரு கடினமான முடிவு, நான் எடுக்க சிறிது காலம் எடுத்தது” என்று ரஃபேல் நடால் வீடியோவில் கூறினார்.