உலகளவில் டாப் 10 பல்கலை பட்டியல்!

உலகளவில் டாப் 10 பல்கலை பட்டியல்!

டைம்ஸ் ஹையர் எஜூகேசன் சார்பில் கல்வி மற்றும் ஆராய்ச்சிகளில் சிறந்து விளங்கும் பல்கலைக்கழகங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 115 நாடுகளில் உள்ள 2000க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களில் எடுக்கப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், 9வது ஆண்டாக இங்கிலாந்தைச் சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலை முதலிடம் பிடித்துள்ளது.கடந்த ஆண்டு 2வது இடத்தில் இருந்த ஸ்டேன்போர்டு பல்கலைக்கழகம் 6வது இடத்திற்கு தள்ளப்பட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த எம்.ஐ.டி., எனப்படும் மாசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, இந்த ஆண்டு 2வது இடத்தை பிடித்துள்ளது.அதேபோல, கடந்த முறை 4ம் இடத்தில் இருந்த ஹார்வார்டு பல்கலைக்கழகம், 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. பிரின்ஸ்டன் பல்கலை 4வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் கண்ணுக்கெட்டிய துாரம் வரை இந்திய பல்கலைகள் எதுவும் இல்லை. இந்தியாவின் பெங்களூரூவில் செயல்பட்டு வரும் இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் 261வது இடத்தில் உள்ளது.

டாப் 10 பல்கலை பட்டியல்

ஆக்ஸ்போர்டு பல்கலை

மாசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி

ஹார்வார்டு பல்கலை

பிரின்ஸ்டன் பல்கலை

கேம்ப்ரிட்ஜ் பல்லை

ஸ்டேன்போர்டு பல்கலை

கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி

கலிபோர்னியா பல்கலை, பெர்க்லே

இம்பீரியல் காலேஜ் லண்டன்

யேல் பல்கலை

error: Content is protected !!