ரேபிஸ் தடுப்பூசி பற்றாக்குறை மற்றும் விநியோகத்தில் குளறுபடிகள்: மக்கள் அச்சம்!

ரேபிஸ் தடுப்பூசி பற்றாக்குறை மற்றும் விநியோகத்தில் குளறுபடிகள்: மக்கள் அச்சம்!

லக சுகாதார அமைப்பின் (WHO) புள்ளி விவரங்களின்படி, ரேபிஸின் உலகளாவிய பாதிப்பில் மூன்றில் ஒரு பங்கை இந்தியா கொண்டுள்ளது, ஆசியளவில் இந்த நோயால் இந்தியாவில் 59.9% இறப்புகள் ஏற்படுகிறது, இது உலகளவில் 35 சதவிகிதமாக உள்ளது. இச்சூழலில் ரேபிஸ் எதிர்ப்பு தடுப்பூசி (ARV) விநியோகத்தில் கடுமையான பற்றாக்குறை நிலவுவதாகவும், அது “வீணாகிவிடும்” என்ற அச்சத்தைக் காரணம் காட்டி நண்பகலிலேயே தடுப்பூசி மையங்கள் மூடப்படுவதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதைவிட மோசமான விஷயம் என்னவென்றால், எந்தவோர் ஆரம்ப சுகாதார நிலையத்திலும் ரேபிஸ் இம்யூனோகுளோபுலின் (RIG) தடுப்பூசி இல்லை என்ற தகவல் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நிலவும் சிக்கல்கள்:

  • ரேபிஸ் எதிர்ப்பு தடுப்பூசி பற்றாக்குறை: மாநிலம் முழுவதும் ரேபிஸ் எதிர்ப்பு தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு நிலவுவதாகக் கூறப்படுகிறது. அதாவது  குஜராத்தின் அங்கலேஷ்வரைத் தளமாகக் கொண்ட சிரோன் பெஹ்ரிங் தடுப்பூசிகள் பிரைவேட் லிமிடெட், உலகளவில் ரேபிஸ் எதிர்ப்பு தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் ஒன்றாகும், இது உலக சுகாதார அமைப்பின் முன் தகுதி வாய்ந்த ஆலையில் ஆண்டுதோறும் 15 மில்லியன் டோஸ் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. சிரோன் சமீபத்தில் கிளாக்சோஸ்மித்க்லைன் (ஜி.எஸ்.கே) எனும் உயிரி தொழில்நுட்ப நிறுவனமான பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தால் வாங்கப்பட்டது. 100 மில்லியனுக்கும் அதிகமான நாய்கள் கொண்ட இந்தியாவுக்கு, ரேபிஸ் தடுப்பு தடுப்பூசி 35 மில்லியன் டோஸ் தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளில் கணிசமான பகுதி ஏற்றுமதி செய்யப்படுவதால், இந்தியா தற்போது சுமார் 20 மில்லியன் டோஸ் பற்றாக்குறையை எதிர்கொள்கிறதாம்.
  • “வீணாகிவிடும்” என்ற அச்சம்: மருந்துகள் வீணாகிவிடும் என்ற தவறான புரிதலின் காரணமாக, பகல் வேளையிலேயே தடுப்பூசி மையங்கள் மூடப்படுகின்றன. இதனால், அவசரத் தேவையில் வருபவர்கள் தடுப்பூசி பெற முடியாமல் தவிக்கின்றனர்.
  • இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி இல்லாமை: விலங்கு கடியால் ஏற்படும் ரேபிஸ் நோய்க்கு உடனடியாக செலுத்தப்பட வேண்டிய ரேபிஸ் இம்யூனோகுளோபுலின் (RIG) தடுப்பூசி எந்த ஆரம்ப சுகாதார நிலையத்திலும் இல்லை என்பது மிகவும் கவலையளிக்கிறது. இந்தத் தடுப்பூசி, காயம் ஏற்பட்ட உடனேயே வைரஸ் பரவுவதைத் தடுக்க உதவும் முதல்நிலை சிகிச்சையாகும்.

விளைவுகள்:

இந்த பற்றாக்குறை மற்றும் விநியோகக் குறைபாடுகள், விலங்கு கடியால் பாதிக்கப்பட்டவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். ரேபிஸ் ஒரு கொடிய நோய் என்பதால், சரியான நேரத்தில் தடுப்பூசி போடாவிட்டால் அது மரணத்தை விளைவிக்கும். குறிப்பாக, இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி இல்லாதது, ஆழ்ந்த காயங்கள் அல்லது தலை, கழுத்துப் பகுதிகளில் ஏற்படும் காயங்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க முடியாத நிலையை ஏற்படுத்துகிறது.

பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், சுகாதாரத்துறை உடனடியாக தலையிட்டு, ரேபிஸ் எதிர்ப்பு தடுப்பூசிகளைப் போதுமான அளவில் இருப்பில் வைப்பதோடு, அதன் விநியோகத்தைச் சீரமைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

தச்சை குமார்

Related Posts

error: Content is protected !!