ஐரோம் ஷர்மிளா உண்ணாவிரத போராட்டத்தை முடிக்கப் படாதுன்னா,, முடிக்கப் படாது!
மணிப்பூரில் மனித உரிமை மீறல்கள் பாதுகாப்பு படையினரால் மேற்கொள்ளப்படுகிறது. பல நூறு மணிப்பூர் அப்பாவி இளைஞர்கள் ஆயுதப்படையினரால் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள். பாதுகாப்பு படையினர் எந்த வித குற்றச்சாட்டும் இல்லாத நபர்களை கைது செய்து விசாரணை என்ற பெயரில் சித்ரவதை செய்வதை கண்டித்தும், ஆயுதப்படையினரின் சிறப்பு அதிகாரச்சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் கடந்த 16ஆண்டுகளாக ஐரோம் ஷர்மிளா உண்ணாவிரதப்போராட்டத்தை மேற்கொண்டு வருகிறார்.

அதன்படி 16 ஆண்டுகளாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வரும் ஐரோம் ஷர்மிளா வரும் 9-ம் தேதியோடு போராட்டத்தை கைவிடுவதாக கூறினார். வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட போவதாகவும், திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் அவர் கடந்த 26-ம் தேதி அறிவித்தார்.
அவரது இந்த திடீர் அறிவிப்புக்கு பரவலாக வரவேற்பு காணப்பட்டது. பிரிட்டனை சேர்ந்தவரை ஐரோம் ஷர்மிளா திருமணம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே ஷர்மிளா அரசியலில் சேரவும், மணிப்பூரை சேராத ஒருவரை திருமணம் செய்து கொள்ளவும், மணிப்பூர் தீவிரவாத குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
ஐரோம் ஷர்மிளா உண்ணாவிரதத்தை தொடர வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர்கள் அரசியலில் சேர்ந்த புரட்சியாளர்கள் பலர் கொல்லப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ளனர். மணிப்பூரை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்பதே அந்த தீவிரவாத குழுக்களின் நோக்கமாகும்.


