பொன்னியின் செல்வன் 2 – விமர்சனம்!
தமிழ் சினிமா ஓவ்வொரு காலகட்டத்திலும் மக்கள் ரசனை சார்ந்தாகவே இருந்துள்ளது மக்களின் ரசனை என்ற் எதிர்பார்ப்பில் சினிமாக்கள் படைக்கப்பட்டன இந்த ரசனை நிலையாக இல்லமால் மாறிக்கொண்டு வந்துள்ளது ஓவ்வொரு காலகட்டத்திலும் அந்த காலத்திற்கான ரசனைகளில் மாற்றம் கொண்டுவந்த படங்கள் பேசுபொருளாகின 80ளில் சில இயக்குனர்கள் யதார்த்த சினிமாவை முன்னெடுத்தர்கள்கள் அவைகளும் ரசிக்கப்ட்டன அந்த வகையில் இயக்கத்தில் தனி சாதனைப் படைத்த மணிரத்னம் படைப்பில் உருவான பொன்னியின் செல்வன் பிரமிக்க வைத்து விட்டது என்பதை சொல்லியே ஆக வேண்டும்.

தமிழ் வாசகர்களில் பலரும் படித்திருந்த அந்த பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் அருண்மொழி வர்மனான பொன்னியின் செல்வனும் (ஜெயம் ரவி), வந்தியத்தேவனும் (கார்த்தி) கடலில் மூழ்க, ஊமை ராணியின் ஆச்சரிய அறிமுகத்துடன் முதல்பாகத்தை முடிந்திருந்தது. அப்படி கடலில் மூழ்கிய அருண்மொழி வர்மனும், வந்தியதேவனும் உயிர் பிழைத்து வருகிறார்கள். அதே சமயம், அருண்மொழி வர்மன், ஆதித்ய கரிகாலன் மற்றும் அவர்களின் தந்தை ராஜேந்திர சோழன் ஆகிய மூவரையும் ஒரே சமயத்தில் கொலை செய்ய சதி திட்டம் தீட்டும் நந்தினியின் எண்ணம் நிறைவேறியதா? இல்லையா?, நந்தினியின் சதி திட்டத்தை அறிந்துக் கொள்ளும் வந்தியதேவனின், ஆதித்ய கரிகாலனை காப்பாற்றும் முயற்சி வெற்றி பெற்றதா?, உயிர் பிழைத்த அருண்மொழி வர்மன் முடி சூட்டிக்கொண்டாரா? ஆகிய கேள்விகளுடன் நந்தினியின் பிறப்பின் ரகசியத்தையும் சொல்வது தான் ‘பொன்னியின் செல்வன் 2’ கதை.
முதல்பாகம் யார்?எவர் என்ற அறிமுகம் என்கிற அளவில் மட்டுமே பிரம்மாண்டம் காட்டியிருந்தது . ஆனால் இந்த இரண்டாம் பாகம், ஒவ்வொரு கேரக்டருக்குமான அழுத்தமானக் கதையை ஆழமாகக் கொண்டிருப்பதால் அதற்கான, மணிரத்னம் டீமின் மெனக்கெடலையும் நடிகர், நடிகைகளின் உழைப்பையும் மொத்தமாகத் தாங்கி நிற்கிறது படம்.
ஆதித்த கரிகாலனாக விக்ரம் கடும் கோபக்காரனாகவும், பாசமிகு அண்ணனாகவும், நெகிழும் காதலனாகவும் தன்னுடைய நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி பார்ப்பவர்களை கவர்ந்திருக்கிறார். குறிப்பாக இவரும் நந்தினி (ஐஸ்வர்யாராயும்) சந்தித்துக் கொள்ளும் காட்சி டாப் நச். பொன்னியின் செல்வன் அருள்மொழி வர்மன் (ஜெயம் ரவி) ஒரு அரசன் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்கிறார். அரசனுக்கே உண்டான அழகும், தெளிவும், மிடுக்கான தோற்றமும், நடையும், முடியும், வசன உச்சரிப்பும் என அத்தனை விஷயங்களிலும் துல்லியமான நடிப்பை தேவையான இடங்களில் எவ்வளவு உபயோகித்தால் நன்றாக இருக்குமா அந்த அளவு சிறப்பாக உபயோகித்து ரசிகர்களிடம் கைத்தட்டல் பெற்றுள்ளார். படத்தின் நடுவே ஆங்காங்கே அவ்வப்போது தோன்றினாலும் இவரின் கதாபாத்திரமும் நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இழுத்திருக்கிறது.
இளமைப் பருவம், காதலினால் நாடோடியாவது, பின் பாண்டிய நாட்டு இளவரசியாவது, தாயார் குறித்த பின்கதை, ஆதித்த கரிகாலன் முன் உடைவது என ஆழமாக விரியும் நந்தினியின் கதாபாத்திரத்திற்கு தன் முதிர்ச்சியான நடிப்பால் உயிர்கொடுத்திருக்கிறார் ஐஸ்வர்யா ராய். “என்னால முடியாத எதுவும் உன்னாலயும் முடியாது” என்று ரவிதாசனிடம் அவர் சொல்லும் இடம், அந்தப் பாத்திரத்தின் தன்மையை விளக்க ஒரு சோற்றுப் பதம்.
பர்ஸ்ட் பார்ட்டில் கம்மி ரோலில் வந்த ஜெயம் ரவிக்கு செகண்ட் பார்ட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. புத்த பிட்சுகள் முன்னிலையில் அவர் தப்பிக்கும் காட்சி, அரண்மனைக்குள் நடக்கும் சண்டைக் காட்சி, க்ளைமாக்ஸ் போர்க் காட்சி என பங்களித்த அனைத்து காட்சிகளிலும் ச்கோர் செய்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் வரும் ஆழ்வார்க்கடியான் நம்பி ஜெயராம், கார்த்தியை போல் படம் முழுவதும் வருகிறார். கிடைக்கின்ற இடங்களில் எல்லாம் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்து ரசிக்க வைத்துள்ளார். அதேபோல் பெரிய பழுவேட்டரையராக வரும் சரத்குமார், சின்ன பழுவேட்டரையராக வரும் பார்த்திபன், மதுராந்தகன் ரகுமான், செம்பியன் மாதேவி ஜெயசித்ரா, பாலாஜி சக்திவேல், சுந்தர சோழர் பிரகாஷ்ராஜ், ஊமை ராணி ஐஸ்வர்யா ராய், பார்ப்பேந்திர பல்லவன் விக்ரம் பிரபு, பெரிய வேளாளர் பிரபு, பாண்டிய நாட்டின் ரவி தாசன் ஆக வரும் கிஷோர், சேர்ந்தன் அமுதன் உள்ளிட்ட பலர் அவரவருக்கான வேலையை சிறப்பாக செய்து இக்காவியம் சிறப்பாக வர உதவி புரிந்துள்ளனர்.
பிறகு இப்படத்தின் மிகப்பெரிய பலமாக அமைந்திருப்பது இரண்டு விஷயங்கள். ஒன்று ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் இன்னொன்று இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான். தன்னுடைய டிரேட் மார்க் ஒளிப்பதிவு மூலம் இப்படத்தை உலகத் தரத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன். இவரின் தேர்ந்த காட்சி அமைப்புகளும் அழகான ஃபிரேம்களும் படத்தை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறது. குறிப்பாக இன்டீரியர் சம்பந்தப்பட்ட காட்சிகளை வேற லெவலில் காட்சி அமைத்து திரையில் மேஜிக் நிகழ்த்தி இருக்கிறார். முதல் பாகத்தில் அதிக பாடல்கள் இருந்தது அவை ரசிக்கும் படியும் இருந்தது. இந்த பாகத்தில் பாடல்கள் குறைவு, கிடைக்கின்ற கேப்புகளில் சிறிய பாடல்களாக தூவி இருக்கிறார் இசைப் புயல் ஏ.ஆர். ரகுமான். அவை ஒருபுறம் செவிக்கு தேனாய் பாய்ந்து கொண்டிருக்க இன்னொரு புறம் பின்னணி இசை மூலம் பார்ப்பவர்களுக்கு கூஸ் பம்ப் கொடுத்திருக்கிறார். இவரின் நேர்த்தியான இசைக் கோர்ப்பும், அக்காலகட்டத்தின் இசைக் கருவிகளை பயன்படுத்திய விதமும், தேவைப்படும் இடங்களில் இவர் கொடுத்த பின்னணி இசையும் படத்தை உலக தரத்திற்கு எடுத்துச் சென்று ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது. இப்படத்தின் இன்னொரு நாயகனாக மாறியிருக்கிறார் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான். இவர்கள் இருவருக்கும் இணையாக சரியான டஃப் கொடுத்து கலை இயக்கம் மூலம் நம்மை சோழ தேசத்திற்கே கொண்டு சென்று இருக்கிறார் கலை இயக்குநர் தோட்டா தரணி. இவரின் ஒவ்வொரு செட் அமைப்புகளும் அவ்வளவு லைவாக அமைந்து நம்மை சோழ தேசத்திற்குள் உலா வரச் செய்துள்ளது.
கல்கி கதையில் இல்லாத பல விஷயங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. அவர் சொல்லாமல் விட்ட தகவல்களை, சோழர் வரலாற்றுத் தகவல்களின் துணைகொண்டு நிரப்ப முயன்றிருக்கிறார்கள். கற்பனைக் காட்சிகளையும் சேர்த்திருக்கிறார்கள். கதையின் தொடர்ச்சி விடுபடாமல் இருப்பதற்கு இந்த உத்தியைப் பயன்படுத்தியிருப்பதாகப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை அப்படியே எதிர்பார்த்துச் செல்பவர்களுக்கு இந்த மாற்றங்கள் ஏமாற்றம் அளிக்கலாம். கூடவே இது சரியில்லை.,, அது அப்படி இருந்து இருக்கலாம் என்றெல்லாம் சொல்ல சிலபல விஷயங்கள் இருந்தாலும் ஒரு புதினம் முழுமையான சினிமாவாகி இருப்பதைக் கொண்டாடியே ஆக வேண்டும்..
மொத்தத்தில் இந்த பொன்னியின் செல்வன் – ஆஹா!
மார்க் 4/5


