தமிழக பள்ளிகளுக்கு நாளை முதல் கோடை விடுமுறை!

தமிழக பள்ளிகளுக்கு நாளை முதல் கோடை விடுமுறை!

மிழ்நாட்டில் மாநில கல்வி திட்டத்தில் கல்வி பயிலும் 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை(ஏப்ரல் 29) முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று முதல் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மீண்டும் பள்ளிகள் திறப்பது குறித்து சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் ஆலோசனை மேற்கொண்டார்.

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் அன்பின் மகேஷ்;- தமிழ்நாட்டில் கோடைகால விடுமுறை முடிந்து ஜூன் 1ம் தேதி 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும், 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 5ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். அனைத்து பள்ளிகளுக்கும் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கரோனா பரவலால் நடப்பு கல்வியாண்டு (2022-23) பள்ளிகள் சற்று தாமதமாக கடந்த ஜூன் 13-ம் தேதி திறக்கப்பட்டன. எனினும், 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி ஏப்ரல் மாதத்துக்குள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வுகள் பள்ளி அளவில் அந்தந்த மாவட்ட வாரியாக ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே நடப்பாண்டு அனைத்துவித பள்ளிகளுக்குமான வேலைநாள் இன்றுடன் (ஏப்ரல் 28) நிறைவு பெறுகிறது. இறுதிநாளில் எஞ்சியுள்ள தேர்வு மட்டும் மாணவர்களுக்கு நடத்தப்பட உள்ளது. அதன்பின் மாணவர்களுக்கு நாளை முதல் (ஏப்ரல் 29) கோடை விடுமுறை வழங்கப்படுகிறது. இந்த ஒரு மாதம் விடுப்பு முடிந்து பள்ளிகள் மீண்டும் ஜூன் முதல் வாரத்தில் திறக்கப்படும்.

அடுத்த கல்வியாண்டில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்,வேலை நாட்கள் உட்பட விவரங்கள் அடங்கிய வருடாந்திர காலஅட்டவணை மே 2-வது வாரத்தில் வெளியிடப்படும் என்று துறைஅதிகாரிகள் தெரிவித்தனர்.

error: Content is protected !!