பிரதமர் மோடி தடுப்பூசி இரண்டாம் டோஸ் போட்டுக் கொண்டார்!

பிரதமர் மோடி தடுப்பூசி இரண்டாம் டோஸ் போட்டுக் கொண்டார்!

நாடெங்கும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துக் கொண்டே போகும் சூழலில் இன்று காலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் நரேந்திர மோடி 2ம் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டார். பிரதமருக்கு பாண்டிச்சேரியைச் சேர்ந்த நிவேதா மற்றும் பஞ்சாபைச் சேர்ந்த நிஷா சர்மா ஆகிய செவிலியர்கள் தடுப்பு மருந்தைச் செலுத்தினர்.

நாடெங்கும் கடந்த ஜனவரி 16ஆம் தேதி தடுப்பூசி போட தொடங்கிய சூழலில் தற்போது வரை 9 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. முதல்கட்டமாக சுகாதார, முன்கள பணியாளர்களுக்கும், இரண்டாம் கட்டமாக 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், தற்போது 3ம் கட்டமாக 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு படிப்படியாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தடுப்பூசியின் முதல் டோஸ் மற்றும் இரண்டாம் டோஸ்-க்கு கால இடைவெளியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் கடந்த மார்ச் 1ம் தேதி முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 2வது டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார். மோடி உள்நாட்டுத் தயாரிப்பான கோவேக்சின் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டார் என்பதும் முதல் தவணை ஊசி செலுத்திய புதுச்சேரியைச் சேர்ந்த செவிலி நிவேதா அவருடைய கைகளைப் பிடித்துக் கொள்ள செவிலி நிஷா சர்மா ஊசியை செலுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பின்னர் தடுப்பூசி போட்டுக் கொண்டது குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பேஜில் “இன்று எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா 2வது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டேன். கரோனா வைரஸை எதிர்கொள்வதில் தடுப்பூசி போட்டுக்கொள்வதும் ஒரு உத்தி. ஆகையால், உங்களுக்குத் தகுதி இருந்தால் உடனே தடுப்பூசி பெற்றுக் கொள்ளுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!