இந்த கொரோனா காலத்திலும் ’அது’க்கு ஆசையா? மாஸ்க் போட்டுட்டுக்க மறந்துடாதீங்க!

இந்த கொரோனா காலத்திலும் ’அது’க்கு ஆசையா? மாஸ்க் போட்டுட்டுக்க மறந்துடாதீங்க!

தனித்திரு., இடைவெளி வேண்டும்..தொட்டுப் பேசாதீர்கள், 6 அடி தள்ளியே பேசுங்கள், கை குலுக்காதீர்கள்…இப்படி மனிதனை மனிதனே எதிரி-யாக ட்ரீட் செய்யும் காலமாக்கி விட்டது. இக்கொடூரகொரோனா தொடுதல், இருமல் மூலம் பரவுகிறது என்பதால் உடல் சார்ந்து உங்களுடைய பாலுணர்வுகளை வெளிப்படுத்துவதைக் கட்டுப்படுத்துதல் அவசியம். என்ன தான் பாதுகாப்புகள் கருதி இதையெல்லாம் பின்பற்றினாலும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்து வது கடினம்தான். இந்நிலையில் வெளிநாடுகளிலும் உடலுறவுக் கொள்வதைக் காட்டிலும் சுய இன்பம் காணுதலே சிறந்தது என அறிவுறுத்துகின்றனர். இதை நியூயார்க் போஸ்ட் , வாக்ஸ், ஹெல்த் போன்ற இதழ்களும் அறிவுறுத்துகின்றன. செக்ஸ் டாய்ஸ் பயன்படுத்தினாலும் அதற்கு முன் கைகளை கழுவி சானிடைஸர் தடவியபின் பயன் படுத்துங்கள். செக்ஸ் டாய்ஸுகளையும் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள் என அறிவுறுத்து கின்றன.அத்துடன் கொரோனா பாதிப்பு காரணமாக பாலியல் உறவின் போது முககவசம் அணிவது பாதுகாப்பானது என நியூயார்க் நகர சுகாதாரத் துறை வழிகாட்டுதல்கள் மூலம் அறிவுறுத்தி உள்ளது.

பாலியல் மூலம் கொரோனா பரவுவது குறித்து இன்றும் முழுமையாக ஆய்வு செய்யப்பட வில்லை. எனினும் கொரோனாவில் இருந்து ஆண்கள் மீண்ட பிறகும், மலம் மற்றும் ஆண்கள் விந்தணுக்களில் கொரோனா வைரஸை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அதாவது வைரஸ் பாலியல் ரீதியாக பரவும் வாய்ப்பு உள்ளது. ஆனால் இந்த ஆய்வு போதுமானதாக தெரிய வில்லை, சில விஞ்ஞானிகள் இது சாத்தியமில்லை என்று நினைக்கிறார்கள்.

இந்நிலையில் கொரோனா தொற்றுநோய்களின் போது மக்கள் பாதுகாப்பான உடலுறவு கொள்ள உதவும் வகையில், நியூயார்க் நகர சுகாதாரத் துறை அதன் புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல்களை வெளியிட்டு உள்ளது. கொரோனா உமிழ்நீர் மற்றும் சுவாசத்தின் மூலம் பரவக்கூடும் என்பதால், உடலுறவில் ஈடுபடும்போது மக்கள் முகம் மறைப்பு அல்லது முககவசம் அணியலாம் என்று நியூயார்க் நகர சுகாதாரத் துறை அறிவுறுத்துகிறது. மேலும் பாலியல் நிலைகள் மற்றும் சுவர்கள் போன்ற உடல் தடைகள் ஆகியவற்றைக் கொண்டு ஆக்கப்பூர்வமாக இருங்கள், அதே நேரத்தில் நேருக்கு நேர் தொடர்பைத் தடுங்கள். ஆரம்பத்தில் சொன்னது போல் மக்கள் ஒன்றாக சுயஇன்பம் மூலம் உடல் ரீதியாக தொலைவில் இருக்க முடியும் என வழிகாட்டுதல்கள் பரிந்துரைக்கின்றன.

அதே சமயம் இந்த ஊரடங்கு காலத்தில் பெண்களின் தாம்பத்ய செயல்பாடு முறை அதிகரித்து உள்ளதாக ஓர் ஆய்வின் முடிவில் தெரிவித்துள்ளனர்.முன்பு வாரத்துக்கு 1.9 முறை தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபட்ட நிலையில் அது ஊரடங்கு காலத்தில் 2.4 முறையாக அதிகரித்து உள்ளதாக கூறி உள்ளனர். ஆனால், முன்பு பெண்களிடம் கர்ப்பமாகும் ஆசை 32.7 சதவீதமாக இருந்த நிலையில் அது ஊரடங்கு காலத்தில் 5.1 சதவீதமாக குறைந்துவிட்டதாக தெரிவித்துள்ளனராக்கும்.

Related Posts

error: Content is protected !!