பீனிக்ஸ்- விமர்சனம்!

பீனிக்ஸ்- விமர்சனம்!

பெற்றோர், கல்வி நிறுவனங்கள், ஊடகங்கள் அனைவருக்குமே சிறார் குற்றங்களில் பங்கு உண்டு. இன்று திரைப்படங்களில் வரும் வன்முறை காட்சிகள் மிகவும் கொடூரமானவையாக இருக்கின்றன. இதுபோன்ற காட்சிகளால் கவரப்படும் சிறார்கள், அவற்றை நிஜத்தில் வெளிப்படுத்த முயல்கிறார்கள். நேற்று கூட ஈரோட்டில் பள்ளி வளாகம் ஒன்றில் மாணவர்கள் சிலர் சக மாணவனின் உயிரைப் பறித்த நிகழ்வும் திருவண்ணாமலையில் நடுரோட்டில் ஒரு சிறுவனை வெட்டி சாய்த்த சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. இபப்டி இருக்கும் காலக்கட்டத்தில் பெற்றோர் ஒவ்வொருவரும் தங்கள் குழந்தைகள் மீது முழுமையான அன்பும் அரவணைப்பும் மட்டுமே காட்ட வேண்டும். படிப்பில் கவனம் சிதைந்த மாணவர்கள் மீது தனிகவனம் செலுத்தி அவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற கல்வி நிறுவனங்கள் முன் வர வேண்டும். மட்டுமின்றி ஊடகங்களையும், வன்முறை நிறைந்த திரைப்படங்களையும் ஒழுங்குபடுத்துவது நம் ஒவ்வொருவரின் கடமையாக்கும். இச்சூழலில் தாறுமாறான வன்முறை காட்சிகளை, கதைக்களம் மற்றும் கதை மாந்தர்களின் போராட்டங்களால் பூசி மெழுகு பீனிக்ஸ் வீழான் என்ற டைட்டிலில் ஒரு படத்தை வழங்கி உள்ளார்கள்.

அதாவது தன் சகோதரனை கொன்ற தமிழக தலைநகரான சென்னையில் எம் எல் ஏ-வாக இருக்கும் சம்பத்தை கொடூரமாக கொலை செய்து விடுகிறார் – இன்னமும் வயதுக்கு வராத சிறுவன் சூர்யா சேதுபதி. கொலை செய்யப்பட்டவர் எல் எல் ஏ என்பதால் நாடே பரபரப்பான சூழலில் போலீஸ் சூர்யாவிஜய்சேதுபதியை கைது செய்து கோர்ட் உத்தரவுப்படி சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் (அரசு கூர்நோக்கு இல்லம்) அடைக்கிறது.தை அடுத்து மாண்டுபோன எம் எல் ஏ-வின் மனைவியான மாயா என்ற ரோலில் வரும் வரலக்‌ஷ்மி சரத்குமார், தனது ஆட்களை சிறைக்குள் அனுப்பி சூர்யாவை கொலை செய்ய திட்டமிடுகிறார். அனுப்பி வைக்கும் ஆட்கள் அனைவரையும் அடித்து துவைத்து அனுப்புகிறார் சூர்யா. மீண்டும் கொலை வெறி கொண்டு சூர்யாவை கொல்ல துடிக்கிறார்கள் எம் எல் ஏ-வின் வகையறாக்கள். அவர்களை சூர்யா விஜய்சேதுபதி எப்படி எதிர்கொண்டு தான் ஒரு வீழான் என்பதை நிரூபிக்கிறார் என்று அடி தடி வெட்டு கொலைகளுடன் சொல்வதேபீனிக்ஸ்படக் கதை.

முழு ஹீரோவாக அறிமுகம் ஆகும் சூர்யா சேதுபதிக்கு அதிரிபுதிரியான ஓப்பனிங் ஸாங்கோ அல்லது பஞ்ச் டயலாக்கோ இல்லை. ஆனால் அவரது அதிரடி ஆக்ஷன் படம் முழுக்க அதிர்வலையை ஏற்படுத்துகிறது. ஆயுதங்களுடன் வரும் பல பேரை இந்த வயதில் ஒரே ஆளாக அடித்து துவம்சம் செய்யும் காட்சி எல்லாம் லாஜிக்கை மீறி பக்கா ஆக்‌ஷன் ஹீரோவாக தென்படுவதில் ஜெயித்து விடுகிறார் சின்ன விஜய்சேதுபதி,

ஒவ்வொரு சண்டைக் காட்சிகளிலும் உடல், பொருள், ஆவி என அனைத்தையும் கொடுத்து மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். ஒரு தேர்ந்த பைட்டர் போல், தன்னை கொல்ல வரும் எதிரிகளை துவம்சம் செய்து விடுகிறார். படத்தில் இவருக்கு பெரிதாக வசனங்கள் இல்லை வெறும் ஆக்ஷன் காட்சிகள் மட்டும் தான். அதை சிறப்பாக செய்து கவனம் பெற்று இருக்கிறார், ஹீரோவின் அம்மா ரோலில் வரும் தேவதர்ஷினியின் பாசப்போராட்டமும், எம் எல் மனைவியாக வரும் வரல்ட்சுமியின் பழிவாங்கும் முரட்டு விழியுடனான சிறப்பான நடிப்பிலும் பலே.. பலே சொல்ல வைத்து விடுகிறார்கள். எம்.எல்.ஏ. சம்பத் வழக்கமான வில்லத்தனம் காட்டியிருக்கிறார். மற்றபடி படத்தில் நடித்திருக்கும் சகல் நடிகர்களும் அவரவர் வேலையை சிறப்பாக செய்திருக்கின்றனர். நாயகனின் அண்ணனாக வரும் ‘காக்கா முட்டை’ விக்னேஷ், அபி நட்சத்திரா, வர்ஷா, முத்துக்குமார், திலீபன், அஜய் கோஷ், ஹரிஷ் உத்தமன், மூணாறு ரவி, நவீன், காயத்ரி, அட்டி ரிஷி என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் குறிப்பாக வடசென்னை மற்றும் அதன் சுற்றி உள்ள பகுதியை சேர்ந்த இளைஞர்களாக நடித்திருக்கும் நடிகர்கள் அவரவர் கதாபாத்திரத்தை உணர்ந்து சரியான பங்களிப்பை கொடுக்க வைத்துள்ளார் டைரக்டர்.

சீனியர் கேமராமேனான ஆர்.வேல்ராஜின் ஒளிப்பதிவில், சிறுவர் சீர்த்திருத்த பள்ளியின் ஒரு அறை, நீதிமன்றம், தற்காப்புக் கலை போட்டி என படம் முழுக்க நீக்கமற வியாபித்துள்ள அதிரடியாக காட்சிப்படுத்தி ரசிகனை ஒன்ற செய்திருக்கிறார். மியூசிக் டைரக்டர் சாம் சி.எஸ். பின்னணி இசை காதை கிழிக்கிறது. இருந்தாலும் அந்த சத்தமான இசைதான் பல இடங்களில் பக்கபலமாக அமைந்து விட்டது. குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் ஒவ்வொரு அடியையும் இசை வடிவில் வழங்கி ஸ்கோர் செய்கிறார்,

ஆனால் வளர்ந்த நிஜ சூர்யா(சிவகுமார்), தனுஷ் உள்ளிட்ட பலரும் முழுக்க அடி, தடி, அரிவாள் வெட்டுடன் ரத்தம் சொட்டும் காட்சிகளுடன் கதை அமைத்து முத்தாய்ப்பாக க்ளைமாக்சில் ஒரு வரி டயலாக்கில் வன்முறை வேண்டாம் என்று சொல்லும் பாணியில் இன்னும் முளைவிடாத சிறுவனை வைத்து இப்படியோர் கதையில் நடிக்க அனுமதித்துள்ள ஹீரோவின் நயினா விஜய்சேதுபதிக்கு கண்டனங்கள்.

அதே சமயம் கிடைத்த மிகக் கடினமான ஆக்ஷன் காட்சிகளை அநாயசமாக செய்துக்காட்டி சபாஷ் சொல்ல வைத்து விட்டார் சின்ன விஜய் சேதுபதி.

மொத்தத்தில் இந்த பீனிக்ஸ் – குறும்பாட்டு ரத்தப் பொரியல்

மார்க் 2.75

CLOSE
CLOSE
error: Content is protected !!